பொது செய்தி

இந்தியா

மூன்றில் இருவருக்கு நோய் எதிர்ப்பு ஐ.சி.எம்.ஆர்., ஆய்வில் தகவல்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
புதுடில்லி:'நாட்டின் மக்கள் தொகையில் 6 வயதுக்கு மேற்பட்ட, மூன்றில் இரண்டு பங்கினருக்கு, கொரோனா எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகி உள்ளது' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி, மக்கள் உடலில் உருவாகி உள்ளதா என்பதை அறிய, 'செரோ டெஸ்ட்' எனப்படும், நோய் எதிர்ப்பு சக்தியை கண்டறியும் பரிசோதனையை, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருந்துவ

புதுடில்லி:'நாட்டின் மக்கள் தொகையில் 6 வயதுக்கு மேற்பட்ட, மூன்றில் இரண்டு பங்கினருக்கு, கொரோனா எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகி உள்ளது' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி, மக்கள் உடலில் உருவாகி உள்ளதா என்பதை அறிய, 'செரோ டெஸ்ட்' எனப்படும், நோய் எதிர்ப்பு சக்தியை கண்டறியும் பரிசோதனையை, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருந்துவ ஆராய்ச்சி கவுன்சில் செய்து வருகிறது.

இதுவரை பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 28 ஆயிரத்து 975 பொது மக்களிடமும், 7,252 சுகாதார பணியாளர்களிடமும் மூன்று கட்டங்களாக இந்த பரிசோதனைகள் நடத்தப்பட்டன. ஜூன் - ஜூலையில் 21 மாநிலங்களைச் சேர்ந்த 70 மாவட்டங்களில் நான்காவது கட்ட, 'செரோ டெஸ்ட்' மேற்கொள்ளப்பட்டது.


40 கோடி மக்கள்

இந்த பரிசோதனை குறித்து, ஐ.சி.எம்.ஆர்., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது:நாட்டின் மக்கள் தொகையில், 6 வயதுக்கு மேற்பட்ட, மூன்றில் இரண்டு பங்கினர் அல்லது 68 சதவீதம் பேருக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகி உள்ளது. மீதமுள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகவில்லை. எனவே 40 கோடி மக்கள் எளிதில் தொற்று பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளனர்.

இந்த ஆய்வில் பங்கேற்ற 85 சதவீத சுகாதாரப் பணியாளர்களின் உடலில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது. சுகாதாரப் பணியாளர்களில் 10ல் ஒருவர் தடுப்பூசி போடாதவராக உள்ளார்.


அலட்சியம் காட்ட கூடாது



சமூக, ஆன்மிக, அரசியல் கூட்டங்கள், தேவையற்ற பயணங்கள் தவிர்க்கப்பட வேண்டும். இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே பயணங்கள் மேற்கொள்ளலாம். குழந்தைகள் உடலில் கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது. எனவே, கல்வி பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டதும் பள்ளிகளை திறக்க முடிவு செய்யும்போது, முதலில் ஆரம்ப பள்ளிகளை திறப்பதே சிறந்தது.

மூன்றில் இரண்டு பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பதால், கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றுவதில் அலட்சியம் காட்ட கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X