அரசியல் செய்தி

தமிழ்நாடு

மருத்துவமனையில் மதுசூதனன் இ.பி.எஸ்., - சசி வருகையால் பரபரப்பு

Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:மதுசூதனன் உடல் நலம் குறித்து விசாரிக்க, இ.பி.எஸ்.,சும், சசிகலாவும் ஒரே நேரத்தில், மருத்துவமனைக்கு வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.தீவிர சிகிச்சைஅ.தி.மு.க., அவைத் தலைவர் மதுசூதனன், 79, உடல் நலக் குறைவு காரணமாக, சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, 'வென்டிலேட்டர்' பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு
 மருத்துவமனையில் மதுசூதனன் இ.பி.எஸ்., - சசி வருகையால் பரபரப்பு

சென்னை:மதுசூதனன் உடல் நலம் குறித்து விசாரிக்க, இ.பி.எஸ்.,சும், சசிகலாவும் ஒரே நேரத்தில், மருத்துவமனைக்கு வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

தீவிர சிகிச்சை

அ.தி.மு.க., அவைத் தலைவர் மதுசூதனன், 79, உடல் நலக் குறைவு காரணமாக, சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, 'வென்டிலேட்டர்' பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல்நிலை மிகவும்கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்., மருத்துவமனைக்கு வந்து அவரது உடல் நலம் குறித்து விசாரித்து சென்றார். அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி., மருத்துவமனைக்கு சென்றார். அவர் மருத்துவமனையில், டாக்டர்களிடம் மதுசூதனன் உடல்நலம் குறித்து விசாரித்துக் கொண்டிருந்தபோது, அ.தி.மு.க., கொடி கட்டிய காரில், சசிகலா மருத்துவமனைக்கு வந்தார்.


நலம் விசாரிப்புபழனிசாமி., மருத்துவமனையில் இருப்பதை அறிந்த சசிகலா, தன் காரில் இருந்து இறங்காமல் அமர்ந்திருந்தார். சசிகலா வந்ததை அறிந்த, பழனிசாமி., வேகமாக புறப்பட்டு சென்றார். அவர் சென்ற பின், சசிகலா உள்ளே சென்று மதுசூதனன் உடல் நலம் குறித்து, அவரது உறவினர்களிடம் விசாரித்தார்.

சசிகலா அளித்த பேட்டி:கடந்த 1952ம் ஆண்டு, மதுசூதனனுக்கு வயது, 14. அந்த வயதிலேயே, அவர் எம்.ஜி.ஆருக்காக வட சென்னையில், எம்.ஜி.ஆர்., மன்றம் ஆரம்பித்தார். அவர் மீது மிகுந்த பற்று கொண்டவர். எம்.ஜி.ஆர்., காலத்தில்எம்.எல்.சி.,யாக இருந்தார். ஜெ., ஆட்சியில் அமைச்சராக பணியாற்றியவர். எங்களுடைய அ.தி.மு.க.,வின் அவைத் தலைவர். எங்கள் குடும்பத்தின் மூத்த சகோதரர். அவர் நலம் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


சசிக்கு உரிமை கிடையாது!

''அ.தி.மு.க., கொடியை பயன்படுத்த, சசிகலாவுக்கு எந்த உரிமையும் கிடையாது,'' என, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:சசிகலாவுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவர் காரில், அ.தி.மு.க., கொடி கட்டி வரக் கூடாது. கட்சிக் கொடியை பயன்படுத்த, அவருக்கு எவ்வித உரிமையும் கிடையாது. அரசு அலுவலகங்களில், யார் படம் வைக்கப்பட வேண்டும் என விதி உள்ளது. அதை மீறுவது, சட்ட மீறல்.

அதன்படி சட்டத்துறை அமைச்சர், சட்டத்தை மீறி உள்ளார். அவர் தன் பூஜை அறையில், உதயநிதி படம் வைத்து, பூஜை செய்யலாம். அதில், எங்களுக்கு மாறுபட்ட கருத்து கிடையாது. ஆனால், தலைமைச் செயலகம் அரசாங்கத்தின் சொத்து. அங்கு உதயநிதி படம் வைப்பது, சட்ட விதிமீறல். தி.மு.க., கொடுத்த 505 வாக்குறுதிகளை நிறைவேற்ற 5 லட்சம் கோடி ரூபாய் தேவை. அதை எப்படி திரட்ட போகின்றனர் என்று பார்ப்போம்.

தி.மு.க., முதுகில், காங்கிரஸ் சவாரி செய்கிறது.எங்கள் முதுகில், யாரும் சவாரி செய்ய முடியாது. எங்கள் கொள்கை வேறு; பா.ஜ., கொள்கை வேறு. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Venkatraman - chennai,இந்தியா
21-ஜூலை-202109:32:21 IST Report Abuse
R.Venkatraman Instead of giving statement Sasikala has no right to use party's official flag in her car ,why party is shying away taking action? What Stalin is going to do with Arumugasamy Commission on circumstances leading to death of Jayalalitha ? Commission runnung cost Rs.4 crores of tax payer's money till date and expenses still mounting?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X