கோர்ட் செய்தி

தமிழ்நாடு

உணவு வழங்க அன்னதான நிதி உத்தரவை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
சென்னை:ஒரு லட்சம் உணவுப் பொட்டலம் வழங்கும் திட்டத்துக்கு, தேவையான பற்றாக்குறை நிதியை, அன்னதான திட்ட நிதியில் இருந்து வழங்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.கடந்த மே 27ம் தேதி வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், 'கொரோனா காலத்தில் உணவு தேவைப்படுபவர்களுக்கு, கோவில்கள் வாயிலாக உணவுப் பொட்டலம் வழங்க தேவையான நிதியை, அறநிலையத் துறை

சென்னை:ஒரு லட்சம் உணவுப் பொட்டலம் வழங்கும் திட்டத்துக்கு, தேவையான பற்றாக்குறை நிதியை, அன்னதான திட்ட நிதியில் இருந்து வழங்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த மே 27ம் தேதி வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், 'கொரோனா காலத்தில் உணவு தேவைப்படுபவர்களுக்கு, கோவில்கள் வாயிலாக உணவுப் பொட்டலம் வழங்க தேவையான நிதியை, அறநிலையத் துறை கமிஷனர் அலுவலகத்தில் பேணப்பட்டு வரும், அன்னதான திட்ட மைய நிதியில் இருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது' எனக் கூறப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், மதுரையைச் சேர்ந்த, 'ஹிந்து தர்ம பரிஷத்' அமைப்பின் நிர்வாக அறங்காவலரான, கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த மனு: கோவில் அன்னதான திட்ட மைய நிதியில் இருந்து, மக்களுக்கு உணவுப் பொட்டலம் வழங்க, 2.51 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவிப்பது, சட்டத்துக்கு எதிரானது.மே 27 அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். விசாரணை முடியும் வரை தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த,தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதிசெந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு பிறப்பித்த உத்தரவு:அறநிலையத் துறை உத்தரவு, தேவைப்படுபவர்களுக்கு நிவாரணம் வழங்க வழி வகுத்துள்ளது. இதில், குறுக்கிட தேவையில்லை; மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X