ஜாதிவாரி கணக்கெடுப்பு இனி நடக்காது!

Updated : ஜூலை 21, 2021 | Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (36)
Share
Advertisement
'மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது எஸ்.சி., - எஸ்.டி., எனப்படும் பட்டியலினப் பிரிவினர் பற்றிய தகவல் மட்டுமே சேகரிக்கப்படும். ஜாதிவாரி கணக்கெடுப்பு இனி நடக்காது' என, லோக்சபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.தற்போது நாடு முழுதும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் அதிகபட்சம் 49.5 சதவீதம் வரை இட ஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு அளித்து உள்ளது. தமிழகம் உட்பட பல
ஜாதிவாரி கணக்கெடுப்பு இனி,  நடக்காது!

'மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது எஸ்.சி., - எஸ்.டி., எனப்படும் பட்டியலினப் பிரிவினர் பற்றிய தகவல் மட்டுமே சேகரிக்கப்படும். ஜாதிவாரி கணக்கெடுப்பு இனி நடக்காது' என, லோக்சபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.தற்போது நாடு முழுதும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் அதிகபட்சம் 49.5 சதவீதம் வரை இட ஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு அளித்து உள்ளது. தமிழகம் உட்பட பல மாநிலங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.


1,257 ஜாதிகள்பிரிட்டிஷ் ஆட்சியின்போது 1931ல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பின் இது தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இந்நிலையில் மத்தியில், காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியில் இருந்தபோது 2011ல் சமூக, பொருளாதார, ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கடந்த 2015ல் இந்தக் கணக்கெடுப்பு விபரங்கள் வெளியிடப்பட்டன. ஆனால் சமூக, பொருளாதார ரீதியிலான தகவல்கள் மட்டுமே வெளியிடப்பட்டன. ஜாதிவாரி கணக்கெடுப்பு தகவல்கள் வெளியிடப்படவில்லை

.கடந்த 1931ம் ஆண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பின்படி பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 1,257 ஜாதிகள் இருப்பதாகவும், மொத்த மக்கள் தொகையில், அவர்கள் 52 சதவீதம் இருப்பதாகவும், மண்டல் கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதனால் எஸ்.சி., - எஸ்.டி., எனப்படும் பட்டியலினத்தவருக்கு வழங்கப்படும் 22.5 சதவீத இட ஒதுக்கீட்டை 49.5 சதவீதமாக உயர்த்தி, அதில், ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினரையும் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டது.இதற்கிடையே ஓ.பி.சி., பிரிவில் இடம் பெற்றுள்ள பல ஜாதிகள் உள் ஒதுக்கீடு கோரியுள்ளன. இதையடுத்து ஓ.பி.சி., பிரிவில் உள்ள ஜாதிகளுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, டில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி ஜி. ரோஹிணி தலைமையில் ஓ.பி.சி., கணக்கெடுப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழு இதுவரை தன் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை.நம் நாட்டில் 10 ஆண்டு களுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதன்படி 2021ல் கணக்கெடுப்பு நடத்த, 2019 மார்ச்சில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்தக் கணக்கெடுப்பு இன்னும் துவங்கவில்லை.
லோக்சபாஇந்நிலையில் தி.மு.க.,வைச் சேர்ந்த பாலு, பா.ஜ.,வைச் சேர்ந்த ரக் ஷா நிகில் காட்சே ஆகியோர் கேட்டுள்ள கேள்விகளுக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், லோக்சபாவில் நேற்று பதிலளித்தார். அவர் கூறியுள்ளதாவது:அரசியல் சாசனத்தின்படி லோக்சபா மற்றும் சட்டசபைகளில் எஸ்.சி., - எஸ்.டி,, பிரிவினருக்கு இடஒதுக்கீடு உள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு என இடஒதுக்கீடு வழங்குவதற்காக மக்கள் தொகை கணக்கெடுப்பில் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினரா என்ற விபரம் மட்டும் சேகரிக்கப்படும்.'ஜாதிவாரி விபரங்களை சேகரிக்க வேண்டும்' என, மஹாராஷ்டிரா, ஒடிசா மாநிலங்கள் கேட்டுள்ளன. ஆனால் மத்திய அரசின் கொள்கை அடிப்படையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு இனி நடத்தப்படாது.இவ்வாறு அவர் கூறினார்.

காரணம் என்ன?

'ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாது' என, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது குறித்து சட்ட நிபுணர்கள் கூறியுள்ளதாவது:மக்களை எப்படி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்பதற்காக ஜாதிவாரி கணக்கெடுப்பை பிரிட்டிஷார் 1931ல் நடத்தினர். அந்த புள்ளி விபரங்களின் அடிப்படையில் ஓட்டு வங்கியை உருவாக்க, 1980களில் அரசியல் கட்சிகள் முயன்றன.
தற்போதைய நிலையில் பொதுப் பிரிவினர், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினரைத் தவிர மற்றவர்கள், ஓ.பி.சி., பிரிவில் உள்ளனர். அவர்களுக்கு தற்போது 27 சதவீத இடஒதுக்கீடு கிடைத்து வருகிறது. உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் என பல மாநிலங்களில் பொதுப் பிரிவில் உள்ளோர் மற்றும் ஓ.பி.சி., பிரிவினரின் ஆதரவு பா.ஜ.,வுக்கு கிடைத்துள்ளது. இது அரசியல் ரீதியில் பா.ஜ.,வுக்கு சாதகமான அம்சம்.

ஏற்கனவே 2011ல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடந்துள்ளது. ஓ.பி.சி., பிரிவினருக்கான உள் ஒதுக்கீடு குறித்தும் நீதிபதி ரோஹிணி தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது. இந்த சூழ்நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால், அது பல புதிய பிரச்னைகளை உருவாக்கும். ஒவ்வொரு ஜாதியினரும் அதிக அளவு இட ஒதுக்கீடு கேட்கும் சூழ்நிலை உருவாகும். அதை தவிர்க்கவே ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசு தயாராக இல்லை என தெரிகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது சிறப்பு நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathyanarayanan Subramanian - Tambaram,இந்தியா
22-ஜூலை-202103:41:36 IST Report Abuse
Sathyanarayanan Subramanian அதனால் தான் தேச கவிஞர் பாரதி ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று சொன்னார். கல்வி மற்றும் வேலை வாய்ப்பு திறமையுள்ள வர்களுக்கு வழங்க வேண்டும் இந்திய நாடு பொருளாதாரத்தில் முன்னேற வழி வகுக்கும். நன்றி 🙏
Rate this:
Cancel
T.sthivinayagam - agartala,இந்தியா
22-ஜூலை-202100:05:05 IST Report Abuse
T.sthivinayagam தேசிய கட்சி தமிழகத்தில் தன் கட்சியின் தலைமை சமிபத்தில் எதன் அடிப்படையில் மாற்றினாரகள் என்று சொன்னால் தெளிவாக இருக்கும்
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
21-ஜூலை-202121:40:24 IST Report Abuse
vbs manian நல்ல முடிவு. கடவுள் யாரையும் சாதி முத்திரை குத்தி படைக்கவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X