அரசியல் செய்தி

தமிழ்நாடு

தெற்காசியாவில் தொழில்புரிய உகந்த மாநிலமாக தமிழகத்தை உயர்த்துவதே லட்சியம்: ஸ்டாலின்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
சென்னை:''தெற்காசியாவிலேயே தொழில் புரிய உகந்த மாநிலமாக, தமிழகத்தை உயர்த்துவதே எங்கள் அரசின் லட்சியம்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.தமிழக தொழில் துறை சார்பில் நடந்த, 'முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு' விழாவில், அவர் பேசியதாவது:தமிழகம் முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக மாற வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம். கொரோனா தொற்று தமிழகத்தில்
தெற்காசியாவில் தொழில்புரிய உகந்த மாநிலமாக தமிழகத்தை உயர்த்துவதே லட்சியம்: ஸ்டாலின்

சென்னை:''தெற்காசியாவிலேயே தொழில் புரிய உகந்த மாநிலமாக, தமிழகத்தை உயர்த்துவதே எங்கள் அரசின் லட்சியம்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக தொழில் துறை சார்பில் நடந்த, 'முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு' விழாவில், அவர் பேசியதாவது:தமிழகம் முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக மாற வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம். கொரோனா தொற்று தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. எதையும் எதிர்கொள்ளும் வல்லமை கொண்டதாக, மாநிலத்தை மாற்றி இருக்கிறோம்.


புத்துணர்வு

கொரோனா தாக்கத்தின்போது, மருத்துவ நெருக்கடியை மட்டுமல்ல, நிதி நெருக்கடியையும் எதிர்கொண்டோம். அரசு சார்பில், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, நிதி வழங்க கோரிக்கை விடுத்தேன். இரண்டு மாதங்களில் 489.78 கோடி ரூபாய் நிதி திரண்டுள்ளது. நிதி வழங்கிய அனைவருக்கும் நன்றி.'தமிழகத்தில் தொழில் துவங்க வாருங்கள்' என, தமிழக அரசு அழைப்பதை தாண்டி, தமிழக தொழில் அதிபர்கள் மற்ற நிறுவனங்களுக்கு, அழைப்பு விடுக்க வேண்டும்.

உலக அளவில் உற்பத்தி துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தாலும், தமிழகத்தின் பொருளாதாரம் புத்துணர்வு பெற்று இயங்க ஆரம்பித்துள்ளது.கருணாநிதி அரசில், தொழில் துறை அமைச்சராக நான் இருந்தபோது, உலக அளவில் மிகப்பெரும் தொழில் நிறுவனங்கள், தமிழகத்தில் தங்கள் முதலீடுகளை மேற்கொண்டன. அன்று முதலீடுகள் மேற்கொள்ள, இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கியது.

தற்போது, தெற்காசியாவிலேயே தொழில்புரிய உகந்த மாநிலமாக, தமிழகத்தை உயர்த்துவதே, எங்கள் அரசின் லட்சியம். வரும் 2030க்குள், 1 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தி கொண்ட பொருளாதாரமாக, தமிழகத்தை உருவாக்குவதே அரசின் குறிக்கோள். அந்த இலக்கை நோக்கி பயணிக்க, உங்கள் அனைவர் ஒத்துழைப்பும் தேவை.


ஒத்துழைப்பு

முதலீட்டாளர்கள் தொழில் துவங்க தேவையான அனைத்து அனுமதிகளையும், உடனுக்குடன் பெற்று, திட்டத்தை விரைவாக நிறுவ, மேம்படுத்தப்பட்ட ஒற்றை சாளர இணையதளம் '2.0'வை துவக்கி வைத்துள்ளேன். இதில், கூடுதலாக 210 சேவைகளை, அடுத்த ஆண்டு மார்ச்சிற்குள் சேர்க்க திட்டமிட்டுள்ளோம்.

புதிய முதலீடுகளை பெருமளவு ஈர்க்க வேண்டும்என்பது தான், எங்கள் முதல் இலக்கு. அதற்கு உலகத்தரம் வாய்ந்த, உள்கட்டமைப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். ஏற்றுமதி கொள்கை, மருந்து பொருட்கள் மற்றும் உயிரிநுட்ப கொள்கை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்க ஒரு கொள்கை என, பல கொள்கைகளை வெளியிட அரசு திட்டமிட்டுள்ளது.

அனைவருக்கும் உயர்கல்வி, சமூக மேம்பாடு, தொழில் வளர்ச்சி ஆகிய மூன்றும் ஒரே நேரத்தில் சீராக வளர வேண்டும் என்பதே அரசின் இலக்கு. இந்த வளர்ச்சிக்கு, தமிழக தொழில் நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X