பொது செய்தி

தமிழ்நாடு

கட்டக்கோரை பாசிசேகரிக்கும் மீனவர்கள்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : உச்சிப்புளி அருகே சீனியப்பா தர்கா கிராமத்தில் மீனவர்கள் கட்டக்கோரை பாசி சேகரிப்பில் ஆர்வம் காட்டுகின்றனர். மன்னார் வளைகுடா கடலில் 21 தீவுகளை ஒட்டிய பகுதிகளில் கப்பா பைக்கஸ், பெப்சி பாசி, கட்டக்கோரை பாசி உள்ளிட்ட பாசிகள் உள்ளன. கப்பா பைக்கஸ் பாசிகளை மீனவ பெண்கள் வளர்க்கின்றனர்.சீனியப்பா தர்கா கடல் பகுதியை ஒட்டிய முயல் தீவு பகுதியில் கட்டக்கோரை பாசி

ராமநாதபுரம் : உச்சிப்புளி அருகே சீனியப்பா தர்கா கிராமத்தில் மீனவர்கள் கட்டக்கோரை பாசி சேகரிப்பில் ஆர்வம் காட்டுகின்றனர்.

மன்னார் வளைகுடா கடலில் 21 தீவுகளை ஒட்டிய பகுதிகளில் கப்பா பைக்கஸ், பெப்சி பாசி, கட்டக்கோரை பாசி உள்ளிட்ட பாசிகள் உள்ளன. கப்பா பைக்கஸ் பாசிகளை மீனவ பெண்கள் வளர்க்கின்றனர்.சீனியப்பா தர்கா கடல் பகுதியை ஒட்டிய முயல் தீவு பகுதியில் கட்டக்கோரை பாசி அதிகம் வளர்கிறது. இவை மே முதல் செப்., வரை தான் கடலில் கிடைக்கும். இவற்றை இப்பகுதியில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் தினசரி சேகரித்து விற்கின்றனர்.ஒரு படகில் அதிகபட்சம் 350 கிலோ கடற்பாசி சேகரிக்கின்றனர். இவை சாயம் காய்ச்சவும், உரத்திற்காகவும் பயன்படுகிறது. மதுரை, ராணிப்பேட்டை பகுதி வியாபாரிகள் கிலோ ரூ.12க்கு வாங்கி செல்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X