ஒட்டுக்கேட்பு உண்மையா, தொழில் போட்டியா?

Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
இந்தியாவில் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், நீதிபதி உள்ளிட்ட, 300 பேர்களின் மொபைல் போன் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம், பெரிதாக வெடித்துள்ளது. இதற்காக இஸ்ரேல் நாட்டின், 'பெகாசஸ்' என்ற, வேவு பார்க்கும் மென்பொருள் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 16 பத்திரிகைகளும், ஊடகங்களும் கண்டுபிடித்துள்ளன. உடனே, இந்தியாவில் உள்ள பத்திரிகைகளும்,
 ஒட்டுக்கேட்பு உண்மையா, தொழில் போட்டியா?

இந்தியாவில் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், நீதிபதி உள்ளிட்ட, 300 பேர்களின் மொபைல் போன் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம், பெரிதாக வெடித்துள்ளது. இதற்காக இஸ்ரேல் நாட்டின், 'பெகாசஸ்' என்ற, வேவு பார்க்கும் மென்பொருள் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 16 பத்திரிகைகளும், ஊடகங்களும் கண்டுபிடித்துள்ளன.

உடனே, இந்தியாவில் உள்ள பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும், 'இந்திய அரசு தான் இந்த வேவு பார்க்கும் மென்பொருளை வாங்கிப் பயன்படுத்தியது' என்ற குற்றச்சாட்டை வைக்கின்றன. இது எவ்வளவு துாரம் உண்மை? எப்படி நம்புவது?இதை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்று, சர்வதேச இணைய பாதுகாப்பு வழக்கறிஞரான கார்த்திகேயன் கூறியதாவது:

இந்த விவகாரத்தை, நாம் அணுகும் விதமே தவறு. உலக அளவில், 50 ஆயிரம் மொபைல் போன் எண்கள், வெளியானதாகச் சொல்கின்றனர். யார் வெளியிட்டனர் என்ற விபரமே இல்லை; எப்படி நம்புவது?ஏனெனில் அடிப்படையில், 'பெகாசஸ்' நிறுவனத்தை நடத்தும், என்.எஸ்.ஓ., அல்லது அந்த மென்பொருளை வாங்கும் நாடு ஆகிய இருவரில் யாரோ ஒருவர் தான், வேவு பார்க்கப்படும் மொபைல் போன் எண்களை வெளியிட முடியும். மற்றவர்களால், அந்த மென்பொருளை உடைத்து, விபரங்களை எடுக்கவே முடியாது. அவ்வளவு நவீனமான மென்பொருள் அது. 300 கோடி ரூபாய் விலையுள்ள மென்பொருள்.

அப்படி இருக்கும்போது, எப்படி மொபைல் போன் எண்கள் வெளியே வர முடியும்?'பெகாசஸ் மென்பொருளால் பாதிக்கப்பட்ட, மொபைல் போன்களை ஆய்வு செய்தோம். அதில், அதற்கான தடயம்இருந்தது' என்று தெரிவிக்கின்றனர். இப்படி புரிந்து கொள்வோம். வூஹானில் கொரோனா வைரஸ் வந்தபோது, அதன் மரபணு வடிவத்தை, சீன அரசு வெளியிட்டது. அதன் பின்னரே, உலகமெங்கும் அந்த மாதிரியை அடிப்படையாக வைத்து, எல்லா நாடுகளும், கொரோனா நோயை கண்டுபிடிக்க துவங்கின.


யார் எதிரி

அதேபோல், என்.எஸ்.ஓ., நிறுவனம், பெகாசஸ் மென்பொருளின் வடிவமைப்பையும், அது, 'ஜாவா' அல்லது 'சி பிளஸ் பிளஸ்' போன்ற, எந்த தளத்தை அடிப்படையாக கொண்டு எழுதப் பட்ட மென்பொருள் என்பதையும் வெளியிட்டால் தான், மற்றவர்களால் அந்த மென்பொருளையே இனம் காண முடியும். என்.எஸ்.ஓ., இதுவரை, அந்த மென்பொருளின் வடிவமைப்பையோ, தளத்தையோ வெளியிடவில்லை. அது, வெளியிடப் போவதும் இல்லை.

அப்படி இருக்கும்போது, எப்படி குறிப்பிட்ட மொபைல் போன்களில், பெகாசஸ் மென்பொருள் இருந்தது என்று சொல்கின்றனர்?மூன்றாவது, அது ஒரு, 'செல்ப் டிஸ்டிரக்டிங்' எனப்படும், 'தன்னைத் தானே அழித்துக் கொள்ளும்' மென்பொருள். 60 நாட்கள் வரை, அதைப் பயன்படுத்தவில்லை என்றால், அது தன்னைத் தானே அழித்துக் கொண்டு விடும். அதன் மிச்சசொச்சங்களைக் கூட கண்டுபிடிக்க முடியாது.இப்படி இருக்கும்போது, எப்படி மொபைல் போன்களில், பெகாசஸ் மென்பொருள் இருந்ததாக சொல்கின்றனர்?

இங்கே தான் இந்த விவகாரத்தை, வேறு மாதிரி பார்க்க வேண்டும். பெகாசஸுக்கு யார் எதிரி. 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் தான். ஏனெனில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, வாட்ஸ் ஆப் செயலி வாயிலாகத் தான், பெகாசஸ் வேவு பார்க்கும் மென்பொருள், மொபைல் போன்களுக்குள் செலுத்தப்பட்டது. அதாவது, வாட்ஸ் ஆப் என்பது பாதுகாப்பான, ஒரு சமூக ஊடக மென்பொருள் என்று பெருமை பேசுகிறது.

அதன் வழியாக நடைபெறும் உரையாடலையோ, குரல்வழி பேச்சுக்களையோ, வெளியே எவரும் தெரிந்து கொள்ள முடியாது; மிகவும் பாதுகாப்பானது; 'எண்டு டு எண்டு என்கிரிப்டட்' என்று, சொல்லிக் கொள்கிறது. ஆனால் பெகாசஸ், வாட்ஸ் ஆப்பின் பாதுகாப்பை உடைத்து விட்டது. இப்போது, தன்னுடைய தனித்தன்மையைக் காப்பாற்றவும், மேலும் வளரவும், வாட்ஸ் ஆப்ஏன் இந்த பெகாசஸ் மோசடி கதையை அவிழ்த்து விட்டு இருக்கக் கூடாது?


நடவடிக்கை

அதுவும், 40 நாடுகளைச் சேர்ந்தவர்களுடைய பட்டியல், தற்போது வெளியாகி இருப்பதாகச் சொல்கின்றனர். அதில் இடம்பெற்று இருப்பவர்கள் யார் என்று பாருங்கள். மக்களுடைய கவனத்தை கவரக்கூடிய அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இது, இந்தியாவில் மட்டுமல்ல, பெகாசஸ் மென்பொருள் மீது குற்றம் சாட்டப்படும் அனைத்து நாடுகளிலும் இதே, 'பேட்டர்ன்' தான் இருக்கிறது.

அப்படியென்றால், பெகாசஸ் மென்பொருளை உருவாக்கிய, என்.எஸ்.ஓ., நிறுவனத்தின் மீது, உலகத்தின் கோபம் திரும்ப வேண்டும்; அந்நிறுவனம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணத்தில், இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம் அல்லவா? இப்படியும் யோசிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் --

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
21-ஜூலை-202108:01:04 IST Report Abuse
 N.Purushothaman பாராளுமன்றம் கூடியுள்ள நிலையில் மத்திய அரசின் மீது பெரிய விமர்சனங்களை அரசியல் ரீதியாக வைக்க முடியாத நிலையில் இது போன்ற மொக்கை விஷயங்களை அவர்களாகவே உருவாக்கி கையிலெடுக்க வேண்டிய கட்டாயம் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X