அரசியல் செய்தி

தமிழ்நாடு

சசிகலா மனுவை நிராகரிக்க கோரிய வழக்கு தள்ளிவைப்பு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
சென்னை:'அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் செல்லாது' என, சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி, அ.தி.மு.க., நிர்வாகிகள் தொடர்ந்த வழக்கு, வரும், 3க்கு தள்ளி வைக்கப் பட்டது.அ.தி.மு.க., பொதுச்செயலராக இருந்த ஜெ., இறப்புக்கு பின், பொதுச்செயலராக சசிகலாவும், துணை பொதுச் செயலராக தினகரனும் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து, 2017 செப்., 12ல், அ.தி.மு.க., பொதுக் குழு, சென்னையில் நடந்தது. அதில்,

சென்னை:'அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் செல்லாது' என, சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி, அ.தி.மு.க., நிர்வாகிகள் தொடர்ந்த வழக்கு, வரும், 3க்கு தள்ளி வைக்கப் பட்டது.

அ.தி.மு.க., பொதுச்செயலராக இருந்த ஜெ., இறப்புக்கு பின், பொதுச்செயலராக சசிகலாவும், துணை பொதுச் செயலராக தினகரனும் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து, 2017 செப்., 12ல், அ.தி.மு.க., பொதுக் குழு, சென்னையில் நடந்தது. அதில், 'நிர்வாகிகளாக சசிகலா, தினகரன் தேர்வு செய்யப்பட்டது செல்லாது' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

'இந்த பொதுக் குழு கூட்டம் செல்லாது' என அறிவிக்கக் கோரி, சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில், சசிகலா மற்றும் தினகரன் வழக்கு தொடர்ந்தனர்.பின், வழக்கில் இருந்து விலகுவதாக, தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி, அ.தி.மு.க., நிர்வாகிகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுவுக்குபதில் அளிக்க சசிகலாவுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டிருந்தார்.இந்த வழக்கு, நீதிபதி ரவி முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் அளிக்க அவகாசம் அளிக்குமாறு, சசிகலா தரப்பில் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, வரும் 30க்கு தள்ளி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X