பொது செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரத்தில் படகுகள் சிறைபிடிப்பு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கடலோரத்தில் மீன்பிடித்த 3 விசைப்படகு,15 மீனவர்களை, நாட்டுப்படகு மீனவர்கள் சிறை பிடித்து விடுவித்தனர். தமிழக மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின்படி கடலோரத்தில் 5 கடல் மைல் துாரத்தில் நாட்டுப்படகும், அதன்பின் விசைப்படகில் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ராமேஸ்வரம் வளைகுடா பிசாசுமுனை கடலோரத்தில் விதிமீறி மண்டபத்தை சேர்ந்த

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கடலோரத்தில் மீன்பிடித்த 3 விசைப்படகு,15 மீனவர்களை, நாட்டுப்படகு மீனவர்கள் சிறை பிடித்து விடுவித்தனர்.

தமிழக மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின்படி கடலோரத்தில் 5 கடல் மைல் துாரத்தில் நாட்டுப்படகும், அதன்பின் விசைப்படகில் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ராமேஸ்வரம் வளைகுடா பிசாசுமுனை கடலோரத்தில் விதிமீறி மண்டபத்தை சேர்ந்த காதர்முகைதீன், ஜாகிர்உசேன், முத்துக்குமார் ஆகியோரதுவிசைப்படகில் 15 மீனவர்கள் மீன்பிடித்தனர்.இவர்களை ஓலைக்குடா நாட்டுப்படகு மீனவர்கள் படகில் சென்று பிடித்து கரைக்கு கொண்டு வந்தனர்.

பின் மீன்துறை அதிகாரிகள் சமரச பேச்சு நடத்தி நேற்று 3 படகும்,15 மீனவர்களையும் விடுவித்தனர். விதிமீறிய இப்படகிற்குமானிய டீசல், மீன்பிடி அனுமதி சீட்டு ரத்து செய்யப்படும் என மீன்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X