'ஆக்சிஜன் தட்டுப்பாடால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை'

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
புதுடில்லி : “இரண்டாம் அலையின்போது ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் எந்த மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திலும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை” என மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்து உள்ளார். கொரோனா இரண்டாம் அலை உச்சத்தில் இருந்தபோது ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது ஆக்சிஜன் இன்றி பலர் உயிரிழந்ததாக செய்திகள்வெளியாகின. இதுகுறித்து

புதுடில்லி : “இரண்டாம் அலையின்போது ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் எந்த மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திலும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை” என மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்து உள்ளார்.

கொரோனா இரண்டாம் அலை உச்சத்தில் இருந்தபோது ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது ஆக்சிஜன் இன்றி பலர் உயிரிழந்ததாக செய்திகள்வெளியாகின. இதுகுறித்து ராஜ்யசபாவில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு பதிலளித்து மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் கூறியதாவது:தினமும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் விபரங்களை மத்திய அரசிடம் மாநில அரசுகள் அறிக்கையாக சமர்ப்பித்து வருகின்றன.

பலி விபரங்களை சமர்ப்பிக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து மாநிலங்கள் மற்றும்யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுஉள்ளன.அந்த விபரங்களை பார்க்கும் போது எந்த மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திலும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என தெரிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.உரிமை மீறல் தீர்மானம்ஆக்சிஜன் தட்டுப்பாடால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் மாநிலங்களிலும் ஏற்பட்ட உயிரிழப்புகளை அனைவரும் நன்கு அறிவோம்.

பார்லிமென்ட்டில் மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர்தவறான தகவல் அளித்து உள்ளார். அவருக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் தாக்கல் செய்வோம்.
-வேணுகோபால்மூத்த தலைவர், காங்.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X