பொது செய்தி

தமிழ்நாடு

இரண்டாம் நிலை போலீஸ் ஜூலை 26ல் உடற்தகுதி தேர்வு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : இரண்டாம் நிலை போலீஸ், சிறைக்காவலர்,தீயணைப்பு வீரர்களுக்கான உடல் தகுதி தேர்வு ஜூலை 26ல் ராமநாதபுரத்தில் நடக்கிறது. எஸ்.பி., கார்த்திக் கூறியிருப்பது:2020ல் நடந்த போலீஸ் எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 2766 ஆண்கள், 714 பெண்கள் என 3480 பேர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு

ராமநாதபுரம் : இரண்டாம் நிலை போலீஸ், சிறைக்காவலர்,தீயணைப்பு வீரர்களுக்கான உடல் தகுதி தேர்வு ஜூலை 26ல் ராமநாதபுரத்தில் நடக்கிறது.

எஸ்.பி., கார்த்திக் கூறியிருப்பது:2020ல் நடந்த போலீஸ் எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 2766 ஆண்கள், 714 பெண்கள் என 3480 பேர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் ஜூலை 26 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்திறன் மற்றும் உடல் தகுதி தேர்வு நடக்கிறது. இதில் பங்கேற்போர் புகைப்படத்துடன் கூடிய அழைப்பு கடிதத்துடன் அனைத்து ஒரிஜினல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும். நான்கு நாட்களுக்குள் கொரோனா பரிசோதனை செய்து நோய் தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ் கொண்டுவர வேண்டும்.

கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து, கிருமி நாசினியுடன் வரவேண்டும். கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் அழைப்பு கடிதத்துடன், கொரோனா சான்றிதழை இணைத்து யார் மூலமாவது எஸ்.பி.,அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.அவர்களுக்கு உடற்தகுதி தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.அழைப்பு கடிதத்தில்குறிப்பிட்டுள்ளபடி காலை 6:00 மணிக்கு முன் வராதவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X