அரசியல் செய்தி

தமிழ்நாடு

35 தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ரூ.17,141 கோடியில் புதிய தொழில்கள்

Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை:தமிழக அரசின் தொழில் துறை சார்பில் நடந்த 'முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு' விழாவில், 17 ஆயிரத்து 141 கோடி ரூபாய் முதலீட்டில், 35 நிறுவனங்கள் தொழில் துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தன. 'முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு' நிகழ்ச்சி, சென்னையில்நடந்தது. இதில் 17 ஆயிரத்து 141 கோடி ரூபாய் முதலீட்டில், 55 ஆயிரத்து 54 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும்
 35 தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ரூ.17,141 கோடியில் புதிய தொழில்கள்

சென்னை:தமிழக அரசின் தொழில் துறை சார்பில் நடந்த 'முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு' விழாவில், 17 ஆயிரத்து 141 கோடி ரூபாய் முதலீட்டில், 35 நிறுவனங்கள் தொழில் துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தன.

'முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு' நிகழ்ச்சி, சென்னையில்நடந்தது. இதில் 17 ஆயிரத்து 141 கோடி ரூபாய் முதலீட்டில், 55 ஆயிரத்து 54 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில், 35 தொழில் முதலீடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.


திறன்மிகு மையம்

நிகழ்ச்சியில், 4,250 கோடி ரூபாய் முதலீட்டில், 21 ஆயிரத்து 630 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஒன்பது தொழில் திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். அத்துடன் 7,117 கோடி ரூபாய் முதலீட்டில், 6,798 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் ஐந்து திட்டப் பணிகளையும் துவக்கி வைத்தார்.

மொத்தம் 49 திட்டங்கள் வழியாக, 28 ஆயிரத்து 508 கோடி ரூபாய் முதலீட்டில், 83 ஆயிரத்து 482 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.தமிழக தொழில் வழிகாட்டி நிறுவனத்தின், 'மேம்படுத்தப்பட்ட ஒற்றைச் சாளர இணையதளம் 2.0'வை, முதல்வர் துவக்கி வைத்தார். தற்போதுள்ள முதலீட்டாளர்களுக்கு மட்டுமின்றி, புதிய முதலீட்டாளர்களுக்கும் உதவும் வகையில், வணிகம் புரிய தேவையான 100 சேவைகளை, இணையதளத்தில் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செயல்படும் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், 'தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம்' அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் சங்கத்துடன், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த திட்டத்தின் கீழ், தமிழகத்தில் புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்க, புத்தொழில் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

இதற்காக, தமிழக அரசு 5 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. மானியம் பெற, 75 புத்தொழில் நிறுவனங்கள் விண்ணப்பித்தன. முதல் கட்டமாக, ஐந்து நிறுவனங்களுக்கு அனுமதி உத்தரவுகள் வழங்கப்பட்டன.

மேலும், உயர் தர உற்பத்தி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் உள்ள தொழில்களுக்கான, விமானம் மற்றும் விமான இயந்திரப் பாகங்கள் உற்பத்தியை மேம்படுத்த, 'ஜெனரல் எலக்ட்ரிக்' நிறுவனம், திறன்மிகு மையம் அமைக்க திட்டமிட்டு உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

பொது உற்பத்திமின் ஆலைகள், மின்னணுவியல், மோட்டார் வாகன உதிரிபாகங்கள், தொழில் பூங்காக்கள், தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்ப சேவைகள், பொது உற்பத்தி, உணவு பதப்படுத்துதல், காலணிகள், மருத்துவப் பொருட்கள், ஜவுளி உள்ளிட்ட துறைகளில் தொழில்கள் துவக்கப்பட உள்ளன.

துாத்துக்குடி, திருநெல்வேலி, திண்டுக்கல், திருப்பூர், சென்னை, கோவை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கரூர், சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், நாமக்கல், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் புதிய தொழில் நிறுவனங்கள் துவக்கப்பட உள்ளன.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமை செயலர் இறையன்பு, தொழில்துறை செயலர் முருகானந்தம் ஆகியோர் பங்கேற்றனர்.முன்னதாக துவக்கம்!தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும், 'முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு' விழா, நேற்று காலை 11:30 மணிக்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், முதல்வர் ஸ்டாலின் 11:00 மணிக்கு வந்து விட, அப்போதே விழா துவங்கியது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SKANDH - Chennai,இந்தியா
21-ஜூலை-202109:35:46 IST Report Abuse
SKANDH வசனம் பேசியே காலத்தை ஓட்டுகிறார்கள். RS17000+ என்கிறார்கள் . COMPANY களின் பேரை சொல்லுங்க . இவையாவும் ஆதிமுக கொண்டு வந்த COMPANY களுக்கு OLA போல தங்கள் பேரை வைத்துக்கொண்டார்களான்னு பார்க்கணும் . என்னதான் அறிவாளின்னு வேஷம் போட்டாலும் இவர்களின் அறிவு உலகுக்கே தெரியும் .
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
21-ஜூலை-202109:28:14 IST Report Abuse
vbs manian ஆ தி மு க ஆட்சியிலும் இந்த மாதிரி நிறைய படம் போட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X