சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வியாபாரிகள் வருகை இல்லைவெறிச்சோடிய வாரச்சந்தை

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரத்தில் புதன்கிழமைக்கு பதிலாக நேற்று முன்னதாக வாரச்சந்தை நடந்தது. போதிய வியாபாரிகள் வருகையின்றி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். ராமநாதபுரம் நகராட்சி சார்பில், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே வாரச்சந்தை ஒவ்வொரு புதன் தோறும் நடக்கிறது. இந்த வாரம் இன்று பக்ரீத் பண்டிகை என்பதால் ஒருநாள் முன்னதாக

ராமநாதபுரம் : பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரத்தில் புதன்கிழமைக்கு பதிலாக நேற்று முன்னதாக வாரச்சந்தை நடந்தது. போதிய வியாபாரிகள் வருகையின்றி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ராமநாதபுரம் நகராட்சி சார்பில், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே வாரச்சந்தை ஒவ்வொரு புதன் தோறும் நடக்கிறது. இந்த வாரம் இன்று பக்ரீத் பண்டிகை என்பதால் ஒருநாள் முன்னதாக நேற்று (செவ்வாய்) வாரச்சந்தை நடைபெறும் என நகராட்சிமூலம் அறிவித்துஉள்ளனர். நேற்று பெரும்பாலான வியாபாரிகள் வருகையின்றி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. பக்ரீத்தை முன்னிட்டு காலையில் ஏராளமான ஆடுகள் சந்தைக்கு வந்தன. இவ்வாண்டு எதிர்பார்த்த விற்பனை இல்லை என வியாபாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X