பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா விழிப்புணர்வு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளது. மீண்டும் அதிகரிக்காதவகையில் முகக்கவசம் அணிதல், சமூகஇடைவெளியை பின்பற்றுவது போன்ற தொற்று பரவல் தடுப்பு முறையை பின்பற்ற காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு மகளிர் குழு மூலம் அலைபேசியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 19 ஆயிரத்திற்கும்மேற்பட்டவர்கள் கொரோனா தொற்று நோயால்

ராமநாதபுரம் : மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளது. மீண்டும் அதிகரிக்காதவகையில் முகக்கவசம் அணிதல், சமூகஇடைவெளியை பின்பற்றுவது போன்ற தொற்று பரவல் தடுப்பு முறையை பின்பற்ற காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு மகளிர் குழு மூலம் அலைபேசியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 19 ஆயிரத்திற்கும்மேற்பட்டவர்கள் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுஉள்ளனர். 346 பேர் வரை இறந்துள்ளனர். முழுஊரடங்கு மற்றும் நோய்தடுப்பு விதிமுறைகள் காரணமாக தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளது. இருப்பினும் சிலர் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் அலட்சியமாக உள்ளனர். இதனால் மீண்டும் கொரோனா தொற்றுநோய் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதனை தடுக்க மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்க மகளிர் குழுக்கள் மூலம் 100 முதல் 150 வீடுகளுக்கு ஒருவர் நியமிக்கப்பட்டு, கிராம செவிலியர் உடன் தொடர்பு கொண்டு காய்ச்சல் பாதிப்புள்ள பகுதி மக்களிடம் கொரோனா தொற்று பரவல் தடுப்புமுறைகள், கைகழுவும் முறை, எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்து அலைபேசி வழியாக கூறி குணமடையும் வரை கண்காணிக்கப்படுகின்றனர்.ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்ட இயக்குனர் தெய்வேந்திரன் கூறுகையில், 'கொரோனா பரவலை தடுக்க வீடுதோறும் காய்ச்சல் பாதிப்பு கணக்கெடுப்பு நடத்தி உள்ளோம்.

தற்போது நோய் தொற்று குறைந்துஉள்ளது. முன்னெச்சரிக்கையாகமகளிர்குழு உறுப்பினர் மூலம் தடுப்பூசி செலுத்த வலியுறுத்துகிறோம்.காய்ச்சல், சளி, இருமல் அறிகுறி உள்ளவர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டுகின்றனர்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X