பொது செய்தி

தமிழ்நாடு

மண் குதிரை செய்யும் தொழிலாளர்கள்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
ஆர்.எஸ்.மங்கலம் : பாரம்பரிய முறையில் கோயில் விழாக்களுக்கு குதிரைகள், மற்றும் காளைகள் செய்யும் பணியில் தொழிலாளர்கள் இன்றளவும் ஆர்வத்துடன் காணப்படுகின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே கொத்திடல் களக்குடி பகுதியைச் சேர்ந்த, தொழிலாளர்கள் கோயில் விழாக்களுக்கு தேவையான, மண் குதிரைகள்,காளைகள், சுவாமி சிற்பங்கள் உள்ளிட்டவைகளை கலைநயம் மாறாமல் செய்து வருகின்றனர்.சில

ஆர்.எஸ்.மங்கலம் : பாரம்பரிய முறையில் கோயில் விழாக்களுக்கு குதிரைகள், மற்றும் காளைகள் செய்யும் பணியில் தொழிலாளர்கள் இன்றளவும் ஆர்வத்துடன் காணப்படுகின்றனர்.

ஆர்.எஸ்.மங்கலம் அருகே கொத்திடல் களக்குடி பகுதியைச் சேர்ந்த, தொழிலாளர்கள் கோயில் விழாக்களுக்கு தேவையான, மண் குதிரைகள்,காளைகள், சுவாமி சிற்பங்கள் உள்ளிட்டவைகளை கலைநயம் மாறாமல் செய்து வருகின்றனர்.சில மாதங்களுக்கு முன் கிராமங்கள்தோறும் பெரும்பாலான கோயில்களில், பாரம்பரிய முறையில் குதிரை எடுப்பு திருவிழாக்கள் நடைபெற்று வந்தன.தற்போது ஒரு சில பகுதிகளில் மட்டுமே, சிறிய அளவில் குதிரை எடுப்பு விழாக்கள் நடைபெற்று வருகின்றன. இத் தொழிலில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் வேறு தொழிலுக்கு சென்று விட்டனர்.

எனினும் இப்பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள்சிலர் இன்றளவும் இத்தொழிலில் ஈடுபட்டு கிராம பகுதி விழாக்களுக்கு சிறப்பு செய்து வருகின்றனர்.தொழிலாளி பாலு 55, கூறுகையில், எங்களதுகிராமத்தில் முன்னோர்கள் காலந்தொட்டு இன்று வரை கோவிலுக்கு தங்களை அர்ப்பணித்து தேவையான குதிரைகள், காளைகள், சுவாமி சிற்பங்கள், உள்ளிட்டவைகளை மண், சிமென்ட் பயன்படுத்தி செய்து வழங்கி வருகிறோம்.அடுத்த தலைமுறைக்கும்கொண்டு செல்லும்வகையில் தங்களது குழந்தைகளையும் இத்தொழிலில் ஈடுபடுத்தி வருகிறோம் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X