பொதுமக்கள் புகார் தெரிவிக்க சிறப்பு உதவி எண் அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொதுமக்கள் புகார் தெரிவிக்க சிறப்பு உதவி எண் அறிவிப்பு

Added : ஜூலை 20, 2021
Share
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம், பொதுமக்கள் புகார் அளிக்க, சிறப்பு உதவி எண் ஒதுக்கப்பட்டு உள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் புகார், கோரிக்கைகளை கலெக்டரிடம் தெரிவிக்க, சிறப்பு உதவி எண் மற்றும் 'வாட்ஸ் ஆப்' எண் துவக்கப்பட்டு உள்ளது.இந்த எண்ணை, கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்து கூறியதாவது:சிறப்பு உதவி மையத்தை,

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம், பொதுமக்கள் புகார் அளிக்க, சிறப்பு உதவி எண் ஒதுக்கப்பட்டு உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் புகார், கோரிக்கைகளை கலெக்டரிடம் தெரிவிக்க, சிறப்பு உதவி எண் மற்றும் 'வாட்ஸ் ஆப்' எண் துவக்கப்பட்டு உள்ளது.இந்த எண்ணை, கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்து கூறியதாவது:சிறப்பு உதவி மையத்தை, பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 599 7626; 'வாட்ஸ் ஆப்' எண். 98403 27626 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு, தங்களது அனைத்து வகையான புகார் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.

இவ்வாறு தெரிவிக்கப்படும் கோரிக்கை, புகார்கள் மீது சம்பந்தப்பட்ட துறை, வாயிலாக விசாரனை செய்து, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இம்மையம் வாரத்தில், ஏழு நாட்களிலும், 24 மணி நேரமும் செயல்படும்.இது தொடர்பாக, மாவட்டத்தின் அனைத்து வருவாய் கோட்ட அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில், மாவட்ட உதவி மையம் தொடர்பான விளம்பர பலகை வைக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வித்யா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X