பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடை மருந்தகத்தை தரம் உயர்த்த மனு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
திருத்தணி : திருத்தணி கால்நடை மருந்தகத்தை, கால்நடை பண்முக மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என, கால்நடை உதவி இயக்குனர் தாமோதரன், திருத்தணி எம்.எல்.ஏ., சந்திரனிடம் மனு கொடுத்தார்.மனுவில் கூறியிருப்பதாவது:திருத்தணி கோட்டத்தில், 23 கால்நடை மருந்தகம், 6 கிளை நிலையங்கள் இயங்கி வருகிறது. திருத்தணி கால்நடை மருந்தகத்தில், தினசரி, 120 - 150 கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் செயற்கை

திருத்தணி : திருத்தணி கால்நடை மருந்தகத்தை, கால்நடை பண்முக மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என, கால்நடை உதவி இயக்குனர் தாமோதரன், திருத்தணி எம்.எல்.ஏ., சந்திரனிடம் மனு கொடுத்தார்.

மனுவில் கூறியிருப்பதாவது:திருத்தணி கோட்டத்தில், 23 கால்நடை மருந்தகம், 6 கிளை நிலையங்கள் இயங்கி வருகிறது. திருத்தணி கால்நடை மருந்தகத்தில், தினசரி, 120 - 150 கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் செயற்கை கருவூட்டல், 15 - 25 செல்லப் பிராணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

செல்லப் பிராணிகளுக்கு உயர் தர சிகிச்சை அளிக்க, எக்ஸ்-ரே, ஸ்கேன் மற்றும் ரத்தப் பரிசோதனை செய்வதற்கு இங்கு வசதியில்லாததால், சென்னை, வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லுாரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.மேலும், இம்மருந்தகத்திற்கு, 20க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் கால்நடைகளை சிகிச்சைக்காக ஓட்டி வருகின்றனர்.

எனவே, திருத்தணி கால்நடை மருந்தகத்தை பண்முக மருத்துவமனையாக தரம் உயர்த்தினால் செல்லப் பிராணிகளுக்கு உயர் தர சிகிச்சை மற்றும் மருந்துகள் அதிகளவில் ஓதுக்கீடு கிடைக்கும். கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கப்படுவர்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.மனுவை வாங்கிய எம்.எல்.ஏ., முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று, நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X