பச்சையம்மன் கோவிலில் தீமிதி விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பச்சையம்மன் கோவிலில் தீமிதி விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Added : ஜூலை 20, 2021
Share
திருத்தணி : திருத்தணி அருகே, பச்சையம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில், அரசு விதிமுறைகளை மீறி 2,000த்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றதால், தொற்று பரவும் அபாயம் உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.திருத்தணி அடுத்த, முருக்கம்பட்டு பச்சையம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் தீமிதி திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.தற்போது, கொரோனா

திருத்தணி : திருத்தணி அருகே, பச்சையம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில், அரசு விதிமுறைகளை மீறி 2,000த்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றதால், தொற்று பரவும் அபாயம் உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

திருத்தணி அடுத்த, முருக்கம்பட்டு பச்சையம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் தீமிதி திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.தற்போது, கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் நடப்பாண்டு பச்சையம்மன் கோவிலில் தீமிதி விழா நடக்காது என, எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், ஆடி மாதம் முதல் வாரம் என்பதால், நேற்று முன்தினம் 8ம் ஆண்டு தீமிதி திருவிழா நடந்தது.

காலையில், மூலவர்அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.இரவு 7:00 மணிக்கு நடந்த தீமிதி விழாவில் 500க்கும் மேற்பட்டோர் காப்பு கட்டி தீ மிதித்தனர். இதில், முருக்கம்பட்டு, அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 1,500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.இதில் பங்கேற்றவர்கள்,முக கவசம் அணியாமல், சமூக விலகல் கடைப்பிடிக்காமல் கூட்டமாக பங்கேற்றனர்.இதை கண்காணிக்க வேண்டிய காவல் மற்றும்வருவாய் துறையினர், கண்டும் காணாமல் இருந்துள்ளனர் என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X