கோர்ட் செய்தி

தமிழ்நாடு

குண்டர் சட்டத்தில் கைது ரத்து கோரி ஆசிரியர் வழக்கு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
சென்னை:மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைதான, பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியரை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதில் அளிக்க போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.சென்னை, கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியின் முன்னாள் மாணவி அளித்த புகாரில்,

சென்னை:மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைதான, பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியரை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதில் அளிக்க போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.சென்னை, கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியின் முன்னாள் மாணவி அளித்த புகாரில், அப்பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டார். பின், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இவரை காவலில் வைக்க, மாநகர போலீஸ் கமிஷனர், 2021 ஜூன் 24ல் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் ராஜகோபாலனின் மனைவி சுதா தாக்கல் செய்த மனு:கடந்த, 2015ல் சம்பவம் நடந்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகள் தெளிவற்றதாக உள்ளன; தாமதமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு வழக்கு தவிர, வேறு எந்த புகாரும் இல்லை. குண்டர் சட்டத்தின் கீழ் காவலில் வைக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதி பி.என்.பிரகாஷ் தலைமையிலானஅமர்வில், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதில் அளிக்கும்படி, மாநகர போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X