பொது செய்தி

தமிழ்நாடு

பரந்துார் சுகாதார மையத்தில் 'சிசிடிவி' கேமரா பொருத்தம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
வாலாஜாபாத் : பரந்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகம் மற்றும் முக்கிய சந்திப்பு சாலைகளில் கண்காணிப்பு 'கேமரா'க்கள் பொருத்தப்பட்டு உள்ளன.காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய கட்டுப்பாட்டில், 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு, திருட்டு, வாகன விபத்து மற்றும் வழிப்பறி உள்ளிட்ட பல குற்றங்கள் நடக்கின்றன. குறிப்பாக, பரந்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, வழிப்பறி

வாலாஜாபாத் : பரந்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகம் மற்றும் முக்கிய சந்திப்பு சாலைகளில் கண்காணிப்பு 'கேமரா'க்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய கட்டுப்பாட்டில், 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு, திருட்டு, வாகன விபத்து மற்றும் வழிப்பறி உள்ளிட்ட பல குற்றங்கள் நடக்கின்றன. குறிப்பாக, பரந்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, வழிப்பறி அடிக்கடி நடக்கிறது.

இதை தடுக்கும் வகையில், முக்கிய சந்திப்பு மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடுமிடங்களில், கண்காணிப்பு கேமரா பொருத்த, மாவட்ட காவல் துறை நிர்வாகம் அறிவுரை வழங்கி இருந்தது.அதன்படி, காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய கட்டுப்பாட்டில், பரந்துார் - காஞ்சிபுரம் சாலை; பள்ளூர் - சோண்டி சாலை மற்றும் பரந்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் என நான்கு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.இந்நடவடிக்கை, வாகன விபத்து மற்றும் பிற குற்றங்களை தடுக்க உதவும் என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X