பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய அளவிலான சிலம்பம் தங்கம் வென்றார் ஓட்டுனர் மகன்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
படப்பை : கோவாவில் நடந்த, தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில், வேன் ஓட்டுனரின், 13 வயது மகன், தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.தாம்பரத்தை அடுத்த படப்பை, காட்டுக் காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ்; வேன் ஓட்டுனர். இவருக்கு ஜமுனா என்ற மனைவியும், தனுஷ்குமார், 13, என்ற மகனும், ரோகிதா, 11, என்ற மகளும் உள்ளனர்.தனுஷ்குமார், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கிறார். சிலம்பம்
 தேசிய அளவிலான சிலம்பம் தங்கம் வென்றார் ஓட்டுனர் மகன்

படப்பை : கோவாவில் நடந்த, தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில், வேன் ஓட்டுனரின், 13 வயது மகன், தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

தாம்பரத்தை அடுத்த படப்பை, காட்டுக் காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ்; வேன் ஓட்டுனர். இவருக்கு ஜமுனா என்ற மனைவியும், தனுஷ்குமார், 13, என்ற மகனும், ரோகிதா, 11, என்ற மகளும் உள்ளனர்.தனுஷ்குமார், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கிறார். சிலம்பம் கலையில் ஆர்வமுள்ள இவர், படப்பையைச் சேர்ந்த 'இன்டெர்னல் போர்ஸ் மார்ஷலார்ட்ஸ் அகாடமி'யில், ஒன்றரை ஆண்டுகளாக, பயிற்சி பெற்று வருகிறார்.உள்ளூர் போட்டிகளில் அசத்தி வந்த தனுஷ்குமார், ஜூலை, 17, 18, 19 ஆகிய தேதிகளில், கோவாவில் நடந்த, தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டார்.

இதில், 14 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில், தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில், பல மாநிலங்களில் இருந்து, 50 பேர் பங்கேற்றனர்.இதே போட்டியில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில், திருமுடிவாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரும், தங்கம் வென்று சாதனை படைத்து உள்ளார்.சிலம்பம் போட்டியில் அசத்தி வரும் தனுஷ்குமாரின் தந்தை சுரேஷ், பளுதுாக்கும் போட்டியில், பல்வேறு அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்றுள்ளார்.

சிலம்பம் போட்டியில் சாதனை படைத்த தனுஷ்குமார், மணிகண்டன் ஆகிய இருவரையும், ஊர் மக்களும், சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X