பொது செய்தி

தமிழ்நாடு

இலங்கை தமிழர்களுக்கு கொரோனா நிவாரண நிதி

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு, : சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை, செங்கல்பட்டு மாவட்ட முஸ்லிம் மகளிர் சங்கத்தின் மூலம், அரசு மானியம் மற்றும் முகாமிற்கு வெளியே வாழும் இலங்கை தமிழர்களுக்கு, கொரோனா சிறப்பு நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி, செங்கல்பட்டில் நேற்று நடந்தது.சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்

செங்கல்பட்டு, : சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை, செங்கல்பட்டு மாவட்ட முஸ்லிம் மகளிர் சங்கத்தின் மூலம், அரசு மானியம் மற்றும் முகாமிற்கு வெளியே வாழும் இலங்கை தமிழர்களுக்கு, கொரோனா சிறப்பு நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி, செங்கல்பட்டில் நேற்று நடந்தது.

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்று, நலத்திட்ட உதவி வழங்கி பேசியதாவது:தமிழகத்தில், 106 முகாம்களில் தங்கியுள்ள 38 ஆயிரம் பேருக்கு, கொரோனா நிவாரண நிதி 4,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.வெளியே வாழும் இலங்கை தமிழர்கள் 13 ஆயிரத்து 553 பேருக்கும், இதேபோல் நிதி வழங்கப்பட்டு உள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில், இலங்கை தமிழர் 25 குடும்பங்களுக்கு, தலா, 4,000 ரூபாய் வீதம், கொரோனா நிவாரண நிதி உதவி வழங்கி உள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X