கூட்டுறவு ரேஷன் கடைகளில் பச்சரிசி வழங்குவதில் சிக்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு ரேஷன் கடைகளில் பச்சரிசி வழங்குவதில் சிக்கல்

Added : ஜூலை 20, 2021
Share
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ரேஷன் கடைகளில் பச்சரிசி வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.காஞ்சிபுரம் நகரில் கூட்டுறவு சங்கம் சார்பில், 40 ரேஷன் கடைகளும், நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், அமுதம் ரேஷன் கடைகளும் செயல்படுகின்றன.இங்கு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, புழுங்கல் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில் போன்றவை வழங்கப்படுகின்றன.இந்நிலையில்,

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ரேஷன் கடைகளில் பச்சரிசி வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் நகரில் கூட்டுறவு சங்கம் சார்பில், 40 ரேஷன் கடைகளும், நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், அமுதம் ரேஷன் கடைகளும் செயல்படுகின்றன.இங்கு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, புழுங்கல் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில் போன்றவை வழங்கப்படுகின்றன.இந்நிலையில், பிள்ளையார்பாளையம் பகுதிகளில் ஆறு ரேஷன் கடைகள் மற்றும் சின்ன காஞ்சிபுரம் பகுதிகளில் சில கடைகளுக்கு, இம்மாதத்திற்குரிய பச்சரிசி வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, கூட்டுறவு ரேஷன் கடை அதிகாரி ஒருவர் கூறியதாவது:சிறுகாவேரிபாக்கம் குடோனில் இருந்து அரிசி ஏற்றி செல்லும் லாரிகளுக்கான 'டெண்டர்' விடுவதில் பிரச்னை இருக்கிறது. அதனால், லாரிகள் இயக்கப்படாததால் சில ரேஷன் கடைகளுக்கு, பச்சரிசி வழங்க முடியவில்லை. பிரச்னை சரி செய்து, விரைவில் அரிசி வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X