பொது செய்தி

தமிழ்நாடு

கரசங்கால் பண்ணையில் அமைச்சர்கள் ஆய்வு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
படப்பை : கரசங்கால் நாற்றங்கால் பண்ணையில், அமைச்சர்கள் நேற்று, நேரில் ஆய்வு செய்தனர்.குன்றத்துார் ஒன்றியம், கரசங்கால் ஊராட்சியில் இயங்கி வரும் அரசு நாற்றங்கால் பண்ணையை, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன், ஊரக தொழிற்துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர், நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.அப்போது, அங்கு மரக்கன்றுகள் வளர்க்கும் முறை, இயற்கை உரம், மண்புழு உரம் தயாரிக்கும்

படப்பை : கரசங்கால் நாற்றங்கால் பண்ணையில், அமைச்சர்கள் நேற்று, நேரில் ஆய்வு செய்தனர்.

குன்றத்துார் ஒன்றியம், கரசங்கால் ஊராட்சியில் இயங்கி வரும் அரசு நாற்றங்கால் பண்ணையை, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன், ஊரக தொழிற்துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர், நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.அப்போது, அங்கு மரக்கன்றுகள் வளர்க்கும் முறை, இயற்கை உரம், மண்புழு உரம் தயாரிக்கும் முறைகளை பார்வையிட்டு, மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

இதேப்போல், செரப்பணஞ்சேரி ஊராட்சியில் அடர்காடுகள் வளர்ப்பு திட்டத்தில் மரக்கன்றுகள் வளர்க்கும் பணிகளை பார்வையிட்டார்.காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, ஸ்ரீபெரும்புதுார் காங்., - எம்.எல்.ஏ., செல்வபெருந்தகை உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.அதை தொடர்ந்து, வாலாஜாபாத் அடுத்த, ஊத்துகாடு கிராமத்தில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் குழுவினர் சாகுபடி செய்யும் பல வித கீரைகளையும், அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

பின், அமைச்சர்கள் பெரியகருப்பன், அன்பரசன் ஆகியோர், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 2.02 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 292 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X