பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
கைவினை விற்பனையகத்தில் ஆய்வு மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழக, பூம்புகார் கைவினைப் பொருள் விற்பனையகம் இயங்குகிறது. இந்நிறுவன உற்பத்தி, பிற மாநில கைவினைப் பொருட்கள், இங்கு விற்கப்படு கின்றன.தமிழக கைத்திறன் உள்ளிட்ட துறைகளின் அரசு முதன்மை செயலர் அபூர்வா, நிறுவன நிர்வாக இயக்குனர் ஷோபனா உள்ளிட்டோருடன், விற்பனையகத்தில்

கைவினை விற்பனையகத்தில் ஆய்வு

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழக, பூம்புகார் கைவினைப் பொருள் விற்பனையகம் இயங்குகிறது. இந்நிறுவன உற்பத்தி, பிற மாநில கைவினைப் பொருட்கள், இங்கு விற்கப்படு கின்றன.தமிழக கைத்திறன் உள்ளிட்ட துறைகளின் அரசு முதன்மை செயலர் அபூர்வா, நிறுவன நிர்வாக இயக்குனர் ஷோபனா உள்ளிட்டோருடன், விற்பனையகத்தில் நேற்று ஆய்வு செய்தார்.கைவினைப் பொருட்கள் கொள்முதல், விலை மதிப்பு, விற்பனை உள்ளிட்ட விபரங்களை கேட்டறிந்தார்.

இருளர்களுக்கு ஜாதி சான்றிதழ்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு வருவாய் கோட்டத்தில், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய தாலுகா பகுதிகளில், இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த 120 பேர் இருளர் இன ஜாதி சான்றிதழ் கோரி மனு செய்தனர்.இதை பரிசீலித்த வருவாய் கோட்டாட்சியர் சாகிதா பர்வீன், 120 பேருக்கும், இருளர் இன ஜாதி சான்றிதழ்களை நேற்று வழங்கினார். திருப்போரூர் தாசில்தார் ரஞ்சனி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

2 டெபுடி பி.டி.ஓ.,க்கள் இடமாறுதல்

வாலாஜாபாத்: காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், உத்திரமேரூர் ஆகிய ஒன்றியங்கள் மற்றும் ஊரக வளர்ச்சி துறைகளில், பல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடங்கள் உள்ளன.இதில், காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் தணிக்கை பிரிவில் பணிபுரிந்து வந்த மீனா என்பவர், வாலாஜாபாத் ஒன்றியம், ஊராட்சி நிர்வாக துணை வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.அதேபோல், வாலாஜாபாத் ஒன்றியத்தில் நிர்வாக துணை வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த ரங்கராஜன் என்பவர், காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் தணிக்கை பிரிவு துணை வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X