தமிழ்நாடு

பீமந்தாங்கல் நில மோசடி வழக்கு; சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்றம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : பீமந்தாங்கல் கிராமத்தில், தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் எடுத்த விவகாரத்தில், 126 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்ட வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் தாலுகா, பீமந்தாங்கல் கிராமத்தில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்காக நிலம் எடுக்கப்பட்டது.இதற்காக, 83 பேருக்கு, கோடிக்கணக்கான ரூபாய்

காஞ்சிபுரம் : பீமந்தாங்கல் கிராமத்தில், தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் எடுத்த விவகாரத்தில், 126 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்ட வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் தாலுகா, பீமந்தாங்கல் கிராமத்தில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்காக நிலம் எடுக்கப்பட்டது.இதற்காக, 83 பேருக்கு, கோடிக்கணக்கான ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது.ஆனால், கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு, அதன் உரிமையாளர்கள் போலியாக பட்டா பெற்றதாக வருவாய் துறைக்கு வந்த புகாரை, அத்துறை உயரதிகாரிகள் விசாரித்தனர்.

இதில் மொத்தம், 16.5 ஏக்கர் நிலங்களுக்கு போலி பட்டா பெற்றதும், இழப்பீடாக 126 கோடி ரூபாய் வழங்கி, அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டதும் உறுதியானது.இதையடுத்து, இழப்பீடு பெற்ற, 83 பேரின் வங்கி கணக்குகளையும், தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் உத்தரவின்படி முடக்கப்பட்டது.கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடந்துள்ளதால், ஸ்ரீபெரும்புதுார் தாசில்தார் வெங்கடேசன் புகாரின்படி, இந்த வழக்கை, காஞ்சிபுரம் மா வட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர்.

போலி பட்டா மூலம் கோடிக்கணக்கில் இழப்பீடு பெற்ற ஆசிஷ்மேத்தா மற்றும் செல்வம் ஆகியோரை, அவர்கள் கைது செய்தனர்.ஆனால், நில எடுப்பு டி.ஆர்.ஓ., நர்மதா, தாசில்தார் தேன்மொழி, சர்வேயர் வரதராஜன் போன்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில், வருவாய் துறை நில நிர்வாக ஆணையர் பரிந்துரையின்படி, தமிழக அரசு, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.மூன்று நாட்களுக்கு முன், இதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, தமிழக அரசு தற்போது அனுப்பிஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X