தமிழ்நாடு

உள்ளாட்சி வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி விறுவிறு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : உள்ளாட்சி தேர்தலுக்கு, வாக்காளர் பட்டியலை தயார் செய்யும் பணியில் உள்ளாட்சி அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.செங்கல்பட்டு மாவட்டம் உள்ளிட்ட, புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதனால், செப்டம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த, தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது.குறிப்பாக, பிரிக்கப்பட்ட

காஞ்சிபுரம் : உள்ளாட்சி தேர்தலுக்கு, வாக்காளர் பட்டியலை தயார் செய்யும் பணியில் உள்ளாட்சி அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.

செங்கல்பட்டு மாவட்டம் உள்ளிட்ட, புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதனால், செப்டம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த, தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது.குறிப்பாக, பிரிக்கப்பட்ட மாவட்டங்களில், வாக்காளர் பட்டியலை தயார் செய்யும்படி, தமிழக தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியல், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள வார்டுகளுக்கு ஏற்றபடி தயார் செய்யப்பட்டு வருகிறது.வார்டு மறுசீரமைப்பு போன்ற பணிகள் ஏற்கனவே நடந்து முடிந்ததால், அப்பணிகள் தவிர்த்து மற்ற தேர்தல் பணிகளில், உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை, 11 மாவட்ட கவுன்சிலர்கள்; 98 ஒன்றிய கவுன்சிலர்கள்; 1,938 ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள்; 274 ஊராட்சி தலைவர்கள்; 51 நகராட்சி கவுன்சிலர்கள்; 84 பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள், வரக்கூடிய தேர்தலில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.வாக்காளர் பட்டியல் தயாரானவுடன், வெளியிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என, ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X