காய்கறிகள் விலை அதிகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காய்கறிகள் விலை அதிகம்

Added : ஜூலை 20, 2021
Share
ராமநாதபுரம் : வரத்து குறைவு, வாகன வாடகை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் சில நாட்களாக ராமநாதபுரத்தில் காய்கறிகள் விலை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. குறிப்பாக கேரட், பீன்ஸ், உருளை உள்ளிட்ட மலைப்பகுதி காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.நேற்று ராமநாதபுரம் காய்கறி கடைகளில் கிலோ ரூ.70க்கு விற்ற கேரட், பீன்ஸ் 100க்கு விற்றது. ரூ.50க்கு விற்ற அவரைக்காய் ரூ.90க்கும், ரூ.40க்கு

ராமநாதபுரம் : வரத்து குறைவு, வாகன வாடகை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் சில நாட்களாக ராமநாதபுரத்தில் காய்கறிகள் விலை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. குறிப்பாக கேரட், பீன்ஸ், உருளை உள்ளிட்ட மலைப்பகுதி காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.நேற்று ராமநாதபுரம் காய்கறி கடைகளில் கிலோ ரூ.70க்கு விற்ற கேரட், பீன்ஸ் 100க்கு விற்றது. ரூ.50க்கு விற்ற அவரைக்காய் ரூ.90க்கும், ரூ.40க்கு விற்ற பச்சை மிளகாய் ரூ.70, சின்ன வெங்காயம் ரூ.70க்கு விற்றது.சீனி அவரை ரூ.50, இஞ்சி 90, கத்தரி 40, தக்காளி 30, பீட்ரூட் 50, முட்டைகோஸ் 40, முள்ளங்கி 40, சவ்சவ் 40, மேட்டுப்பாளையம் உருளை ரூ.70, சாதா உருளை 40க்கும் விற்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X