சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருநங்கை போலீசிடம் போதையில் சில்மிஷம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
அமைந்தகரை : மதுபோதையில், திருநங்கையான போலீசிடம், சில்மிஷத்தில் ஈடுபட்ட காவலர் உட்பட இருவரிடம் விசாரணை நடக்கிறது.அமைந்தகரையைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ, 28. திருநங்கையான இவர், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் அண்ணா வளைவு அருகே உள்ள உணவகத்திற்கு சென்றார். அப்போது, மதுபோதையில் அங்கு வந்த இருவர், இவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டனர். இது

அமைந்தகரை : மதுபோதையில், திருநங்கையான போலீசிடம், சில்மிஷத்தில் ஈடுபட்ட காவலர் உட்பட இருவரிடம் விசாரணை நடக்கிறது.

அமைந்தகரையைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ, 28. திருநங்கையான இவர், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் அண்ணா வளைவு அருகே உள்ள உணவகத்திற்கு சென்றார். அப்போது, மதுபோதையில் அங்கு வந்த இருவர், இவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து, அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், சில்மிஷத்தில் ஈடுபட்டது, அமைந்தகரை காவல் நிலைய காவலர் கணேசன் மற்றும் அவரது நண்பர் என, தெரியவந்தது. விசாரணைக்கு பின், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X