பொது செய்தி

தமிழ்நாடு

56 இடங்களில் இன்று தடுப்பூசி முகாம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் 56 இடங்களில் இன்று நடக்கும் கொரோனா தடுப்பூசி முகாமில் 9200 பேருக்கு ஊசி போடப்படுகிறது. ராமநாதபுரம், பரமக்குடி சுகாதார மாவட்டம்சார்பில் பக்ரீத் விடுமுறையையொட்டி ஒரே நாளில் 56 இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.ராமநாதபுரம் சுகாதார மாவட்டத்தில் தேவிப்பட்டினம் வட்டாரத்தில் ராமநாதபுரம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் 56 இடங்களில் இன்று நடக்கும் கொரோனா தடுப்பூசி முகாமில் 9200 பேருக்கு ஊசி போடப்படுகிறது.

ராமநாதபுரம், பரமக்குடி சுகாதார மாவட்டம்சார்பில் பக்ரீத் விடுமுறையையொட்டி ஒரே நாளில் 56 இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.ராமநாதபுரம் சுகாதார மாவட்டத்தில் தேவிப்பட்டினம் வட்டாரத்தில் ராமநாதபுரம் ஏ.வி.எம்.எஸ்.,மெட்ரிக் பள்ளி, தேவிப்பட்டினம், ஆர்.காவனுார், சித்தார்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடக்கிறது.மண்டபம் வட்டாரத்தில் 10 இடங்கள், ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் 5 இடங்கள், திருப்புல்லாணி வட்டாரத்தில் 8 இடங்கள், தொண்டி வட்டாரத்தில் 7 இடங்கள், பரமக்குடி சுகாதார மாவட்டத்தில் பாரதியார் நகர், எமனேஸ்வரம் பகுதி உட்பட போகலுார், நயினார்கோவில், பார்த்திபனுார், கீழத்துாவல், சாயல்குடி, பேரையூர் வட்டாரங்களில் 22 இடங்களிலும் தடுப்பூசி முகாம் நடக்கிறது. முகாம்களில் அதிகபட்சம் 200 தடுப்பூசி வீதம் 9200 தடுப்பூசி ஒரே நாளில் போடப்படுவதாக சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X