தமிழ்நாடு

ஒரு லட்சத்தை கடந்தது மாணவர் சேர்க்கை; 10 ஆண்டுகளுக்கு பின் மாநகராட்சி சாதனை

Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில், 10 ஆண்டுகளுக்கு பின் மாணவர் சேர்க்கை, ஒரு லட்சத்தை கடந்துள்ளதால், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 119 தொடக்கப் பள்ளி, 92 நடுநிலை, 38 உயர்நிலை, 32 மேல்நிலை பள்ளிகள் உள்ளன. பொருளாதார இழப்புமாநகராட்சியின் அனைத்து பள்ளிகளும், 'ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்புகளாக மாற்றப்பட்டு வருகின்றன. தனியார்
 ஒரு லட்சத்தை கடந்தது மாணவர் சேர்க்கை;  10 ஆண்டுகளுக்கு பின் மாநகராட்சி சாதனை

சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில், 10 ஆண்டுகளுக்கு பின் மாணவர் சேர்க்கை, ஒரு லட்சத்தை கடந்துள்ளதால், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 119 தொடக்கப் பள்ளி, 92 நடுநிலை, 38 உயர்நிலை, 32 மேல்நிலை பள்ளிகள் உள்ளன.


பொருளாதார இழப்பு


மாநகராட்சியின் அனைத்து பள்ளிகளும், 'ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்புகளாக மாற்றப்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகளுக்கு நிகரான விளையாட்டு மைதானம், ஆங்கிலம் மற்றும் தமிழ் வழிக் கல்வி, அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

மாணவர்கள் மற்றும் பெற்றோரை கவரும் வகையில், வகுப்பறைகள் வண்ண ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி பள்ளிகளில், எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வரை ஆண்டுக்கு 1.50 லட்சம் மாணவர்கள் படிக்கும் கட்டமைப்புகள் உள்ளன. ஆனால், தனியார் பள்ளி மோகத்தால், மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்து வந்தது.இந்நிலையில், ஒன்றரை ஆண்டுகளாக, உலகளாவிய கொரோனா தொற்று பலரின் பொருளாதாரத்தை வெகுவாக சீரழித்து வருகிறது.

பொருளாதாரத்தை இழந்த பலர், தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், தங்கள் குழந்தைகளை மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்க துவங்கியுள்ளனர். பல மாணவர்கள் பள்ளி படிப்பை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதேபோல், இடைநிற்றலில் இருந்த மாணவர்களை அடையாளம் கண்டு, மாநகராட்சியின் கல்வித் தரம், வசதி போன்றவற்றை அவர்களின் பெற்றோருக்கு, மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.


விழிப்புணர்வு

வீடு வீடாக சென்று அவர்கள் மேற்கொண்ட விழிப்புணர்வு காரணமாக, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடப்பாண்டில் கணிசமாக அதிகரித்துஉள்ளது.இது குறித்து, சென்னை மாநகராட்சி கல்வி அலுவலர் பாரதிதாசன் கூறியதாவது:சென்னை மாநகராட்சி பள்ளிகளில், 2021 - 22ம் கல்வியாண்டில், 27 ஆயிரத்து 311 மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களில், 19 ஆயிரத்து 38 மாணவர்கள், தனியார் பள்ளிகளில் இருந்து மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இதன் வாயிலாக, ஒரு லட்சத்து 1,757 மாணவர்கள், நடப்பாண்டில் மாநகராட்சி பள்ளிகளில் படித்து வருகின்றனர்.


தரம் உயர்வு


கடைசியாக 2011ல் மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தை கடந்தது. அதன்பின், 88 ஆயிரம் முதல், 95 ஆயிரம் வரை என்ற சராசரி நிலையில் தான் மாணவர் சேர்க்கை இருந்தது. பத்து ஆண்டுகளுக்கு பின், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சேர்க்கை மேலும் உயர்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாநகராட்சியின் கல்வித் தரம், மாணவர்களை அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் தயார்படுத்தும் வகையில் அமைந்துள்ளதால், எவ்வித தயக்கமுமின்றி பெற்றோர் தங்கள் குழந்தைகளை மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நந்தகோபால், நெல்லை, in பெங்களூரு தனியார் பள்ளி கட்டண கொள்ளை
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
21-ஜூலை-202109:03:39 IST Report Abuse
Lion Drsekar தனியார் பள்ளிகளை வெற்றிகாகரமாக மூடிவிட்டோம் , அவர்களுக்கு சொத்து வரி, குடிநீர் வரி ,மின்சார வரி அதிகரித்துவிட்டோம், அதே போன்று இனி அவர்கள் 75% மட்டுமே பீஸ் வாங்கவேண்டும், பணமே கட்டவில்லை என்றாலும் பீஸ் கேட்கக்கூடாது, பணம் கட்டவில்லை என்றாலும் டிசி கொடுக்கவேண்டும், தனியார்கள் மாணவர்களை சேர்க்க பல கட்டுப்பாடுகள், தினம் தினம் தனியார் பள்ளிகள் எந்த எந்த வகுப்புகளில் எத்தினை மாணவர்கள் படிக்கிறார்கள், சென்றிருக்கிறார்கள் என்ற விபரங்களை அனுப்பவேண்டும், என்று அரசு செய்யவேண்டிய எல்லா செயல்களையும் தனியார் பள்ளிகள் செய்யவேண்டும் , இது தவிர பல கட்டுபப்டுகள் கொடுத்து ஒட்டு மொத்தமாக மூடுவிழாவுக்கு வித்திட்ட துறைக்கு பாராட்டுக்கள், மட்டமாக சொலல்வில்லை தவறாகவும் சொல்லவில்லை, இலவச சைக்கிள் , இலவச கணினி, இலவச உணவு , எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் எந்த வகுப்புக்கும் சேர்க்கும் முறை அரசு பள்ளிகளில் அமலில் இருக்கிறது, இதில் சற்று கவனம் தேவை, கண்டிப்பாக தவறு நடக்க வாய்ப்பு இருக்கிறது . நேரடி வகுப்பு ஆரம்பித்த பின்பு நிலை மாறும், மீண்டும் தனியார் பள்ளிகளுக்கு அதே மாணவர்கள் படையெடுப்பார்கள், பொறுத்து இருந்து பாருங்கள், தனியார் பள்ளிகளில் ஒரு வகுப்பில் மாணவர்களுக்கு 30 மாணவர்கள் மட்டுமே அனுமதி, அதற்க்கு ஒரு ஆசிரியர் ஆனால் தற்போது ஒரு லட்சம் மாணவர்களுக்கு இடம், ஆசிரியர்கள், போதிய இடவசதி ஒரு வகுப்புக்கு எத்தினை ஆரிசியர்கள் , எத்தினை மாணவர்கள் சுகாதார அடிப்படை வசதிகள், ...??/ என்னமோ நடக்குது தனியார்கள் செய்த தவறு .....? அதனால் வந்த விளைவு என்று கூட சொல்லலாம், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X