மரக்கிளை முறிந்து விழுந்து வாகன ஓட்டி பரிதாப பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மரக்கிளை முறிந்து விழுந்து வாகன ஓட்டி பரிதாப பலி

Added : ஜூலை 20, 2021
Share
நந்தம்பாக்கம் : மரக்கிளை விழுந்ததில், இருசக்கர வாகனத்தில் சென்றவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் காயங்களுடன் மீட்கப்பட்டார்.மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் பத்ரிநாராயணன், 47. இவரது நண்பர் ராமானுஜதாசன், 60. இருவரும், நந்தம்பாக்கம், டிபன்ஸ் காலனி பகுதியில் இடம் பார்ப்பதற்காக, இருசக்கர வாகனத்தில் நேற்று காலை சென்று கொண்டிருந்தனர்.அப்போது, சாலையோரம் நின்ற மரத்தின்

நந்தம்பாக்கம் : மரக்கிளை விழுந்ததில், இருசக்கர வாகனத்தில் சென்றவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் காயங்களுடன் மீட்கப்பட்டார்.

மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் பத்ரிநாராயணன், 47. இவரது நண்பர் ராமானுஜதாசன், 60. இருவரும், நந்தம்பாக்கம், டிபன்ஸ் காலனி பகுதியில் இடம் பார்ப்பதற்காக, இருசக்கர வாகனத்தில் நேற்று காலை சென்று கொண்டிருந்தனர்.அப்போது, சாலையோரம் நின்ற மரத்தின் கிளை ஒன்று முறிந்து, பத்ரிநாராயணன் ஓட்டி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது விழுந்தது.

இதில், பத்ரிநாராயணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராமானுஜதாசனை மீட்ட அப்பகுதி மக்கள், சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நந்தம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.நந்தம்பாக்கம் பகுதியில், சில மாதங்களுக்கு முன், பெண் களப்பணியாளர் ஒருவர் மரம் விழுந்து உயிரிழந்த சம்பவமும் நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X