சாலையில் மழை நீர் தேக்கம்| Dinamalar

சாலையில் மழை நீர் தேக்கம்

Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (1)
Share
சேறும், சகதியுமாக மாறிய சாலைகன்டோன்மென்ட் பல்லாவரம், தெரசா பள்ளி அமைந்துள்ள சர்ச் ரோடு அதிக போக்குவரத்து கொண்டது. நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள், இதன் வழியாக சென்று வருகின்றன. சமீபமாக, இச்சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலைக்கு மாறிவிட்டது. ஆங்காங்கே, குண்டும் குழியுமாக உள்ளதால், மாணவர்கள் பெரும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில், அடிக்கடி பெய்து வரும்

சேறும், சகதியுமாக மாறிய சாலை

கன்டோன்மென்ட் பல்லாவரம், தெரசா பள்ளி அமைந்துள்ள சர்ச் ரோடு அதிக போக்குவரத்து கொண்டது. நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள், இதன் வழியாக சென்று வருகின்றன. சமீபமாக, இச்சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலைக்கு மாறிவிட்டது. ஆங்காங்கே, குண்டும் குழியுமாக உள்ளதால், மாணவர்கள் பெரும் சிரமப்படுகின்றனர்.

இந்நிலையில், அடிக்கடி பெய்து வரும் மழையால், சாலை சேறும் சகதியுமாக மாறிவிட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கழிவு நீரால் சுகாதார சீர்கேடு

தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சி, காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் செயல்படுகிறது. இங்குள்ள, 6வது வார்டு, புத்துார் - மப்பேடு பகுதியில், தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. மொத்தம், 103 வீடுகள் உள்ள இக்குடியிருப்பிற்கு கழிவு நீர் தொட்டி வசதி இல்லை.இதனால், அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், அதன் எதிர்புறம் உள்ள காலி நிலங்களில் குட்டை போல் தேங்கி நிற்பதால், சுகாதார சீர்கேடு நிலவுகிறது.

கழிவு நீர் தொட்டி வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை எழுந்த நிலையில், ஊராட்சியின் செயலர், அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகிகளின் கவனிப்பு காரணமாக நடவடிக்கை எடுக்க மறுப்பதாக, பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.

முட்புதரால் பொதுமக்கள் அச்சம்

அம்பத்துார் மண்டலம், 79வது வார்டு, வெங்கடேஸ்வரா நகர், பச்சை அம்மன் தெருவின் ஒரு பக்கத்தில், சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து, முட்புதராக உள்ளது. மாநகராட்சி மூலம் அகற்றப்படும் குப்பை, கழிவுகள் அங்கு குவிக்கப்படுகிறது. இதனால், துர்நாற்றம், கொசு தொல்லை என, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

மேலும், சமூக விரோதிகள், கஞ்சா, மது போதை மற்றும் சூதாட்டத்துக்காக அடர்ந்த புதர் பகுதியை பயன்படுத்திக் கொள்கின்றனர்.அதற்காக, அறிமுகமில்லாத நபர்கள் அங்கு வந்து செல்வதால், வாகன திருட்டு மற்றும் வீடுகளில் நகை, பணம் திருட்டுகள் தொடர்கின்றன. பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள், அருகில் உள்ள வீடுகளுக்குள் நுழைகின்றன. இந்த பிரச்னைக்கு மாநகராட்சி தீர்வு காண வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X