எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

தொகுதி மேம்பாட்டு நிதி முடக்கம் : தி.மு.க., - எம்.பி., சிவா ஆதங்கம்

Updated : ஜூலை 21, 2021 | Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
''எம்.பி.,க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை மத்திய அரசு முடக்காமல் இருந்திருந்தால் கொரோனா இரண்டாவது அலையின்போது நாடெங்கிலும் ஆயிரக்கணக்கான ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை துவங்கி, மக்களுக்கு உதவியிருக்க முடியும்,'' என தி.மு.க., - எம்.பி., திருச்சி சிவா ஆதங்கப்பட்டார். பாரபட்சம் ராஜ்யசபாவில் நேற்று தி.மு.க., - எம்.பி., சிவா பேசியதாவது:எம்.பி.,க்களின் தொகுதி
தொகுதி மேம்பாடு நிதி, முடக்கம், தி.மு.க., - எம்.பி., சிவா ஆதங்கம்

''எம்.பி.,க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை மத்திய அரசு முடக்காமல் இருந்திருந்தால் கொரோனா இரண்டாவது அலையின்போது நாடெங்கிலும் ஆயிரக்கணக்கான ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை துவங்கி, மக்களுக்கு உதவியிருக்க முடியும்,'' என தி.மு.க., - எம்.பி., திருச்சி சிவா ஆதங்கப்பட்டார்.


பாரபட்சம்


ராஜ்யசபாவில் நேற்று தி.மு.க., - எம்.பி., சிவா பேசியதாவது:எம்.பி.,க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியும் முடக்கப்பட்டு உள்ளது. அது இருந்திருந்தால் ஆயிரக்கணக்கான ஆக்சிஜன் ஆலைகளை ஏற்படுத்தியிருக்க முடிந்திருக்கும். தமிழகத்தின் செங்கல்பட்டில் 700 கோடி ரூபாய் செலவில் தடுப்பூசி தயாரிப்பு ஆலையை மத்திய அரசு துவங்கி, பல ஆண்டுகளாக பணிகள் ஏதும் துவங்காமல் அப்படியே உள்ளது. அதை எங்களிடம் தாருங்கள் என பிரதமர், சுகாதாரத் துறை அமைச்சர் உட்பட அனைவரிடமும் தமிழக முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார். இதுவரை மத்திய அரசிடமிருந்து பதில் இல்லை.குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா ஆகிய மாநிலங்களோடு ஒப்பிடு கையில் தமிழகத்திற்கு தடுப்பூசிகள் குறைவான எண்ணிக்கையிலே ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. ஏன் இந்த பாரபட்சம் என தெரியவில்லை.இவ்வாறு அவர், பேசினார்.

அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை பேசியதாவது:தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டதைப்போல, செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையத்தை இயக்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


காப்பாற்ற வேண்டும்



கொரோனாவை கட்டுப்படுத்த உள்ள ஒரே வழி தடுப்பூசி தான். எனவே உள்நாட்டிலேயே தடுப்பூசிகளை அதிக எண்ணிக்கையில் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களை காப்பாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.லோக்சபாவில் எதிர்க்கட்சிகளின் அமளியால் அலுவல்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டதை அடுத்து, நாள் முழுதும் சபை ஒத்திவைக்கப்பட்டது. இன்று பக்ரீத் பண்டிகைக்காக விடுமுறை என்பதால், நாளை காலை, பார்லிமென்ட் மீண்டும் கூடும்.


நிர்மலா சீதாராமனுடன் திருமாவளவன் சந்திப்பு



விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.,யுமான திருமாவளவன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது அமைச்சரிடம், 'சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்'ஆகியவற்றை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்' என வலியுறுத்தி மனு அளித்தார்.

கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானையும் சந்தித்து, 'உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எம்.,களில், பேராசிரியர் நியமனங்களிலும் 'பிஎச்.டி., படிப்புகளுக்கான சேர்க்கையிலும் இடஒதுக்கீட்டு முறையை முறையாக பின்பற்ற வேண்டும்' என வலியுறுத்தி, திருமாவளவன் கோரிக்கை மனு அளித்தார்.- நமது டில்லி நிருபர் -


Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
21-ஜூலை-202121:50:26 IST Report Abuse
vbs manian நாட்டில் எல்லா தொகுதிகளையும் மேம்படுத்தத்தானே மத்திய பட்ஜெட் மாநில பட்ஜெட் கார்பொரேஷன்களின் பட்ஜெட் கிராம பஞ்சாயத்து பட்ஜெட் என்று இருக்கிறது. பின் இது என்ன தொகுதி மேம்பாட்டு தொகுதி என்ற அதிகப்ரசங்கித்தனம். அரசால் அங்கீகரிக்கப்பட்ட பண விரயம். பலருக்கு பாக்கெட் மணி.
Rate this:
Cancel
R.TAMILKUMARAN - tiruvannamalai,இந்தியா
21-ஜூலை-202119:32:43 IST Report Abuse
R.TAMILKUMARAN என்னவோ எம்பி நிதியில் மொத்தமும் இவர்கள் மக்கள் நமைக்காக செலவழிப்பது போல பேசுகிறார். இந்த ஆதங்கம் எல்லாம் கமிஷன் அடிக்க முடிய வில்லையே என்பதால்தான்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
21-ஜூலை-202118:58:25 IST Report Abuse
sankaseshan மக்கள் வரிப்பணத்தை ஆட்டையை போடமுடியாத ஆதங்கம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X