பொது செய்தி

தமிழ்நாடு

மாயமான 11 மீனவர்களும் மீட்பு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
சென்னை : கடலில் மாயமான காசிமேடு மீனவர்கள் 11 பேரை, இந்திய கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர்.சென்னை, ராயபுரத்தைச் சேர்ந்தவர் ஜான்; மீனவர். இவருக்கு சொந்தமான விசைப்படகில், 7ம் தேதி, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, சோமேஷ், ஜெகன், நீலகண்டன், சூரிய நாராயணன், காமேஷ், ராஜு, சிவாஜி, உள்ளிட்ட 11 பேர் கடலுக்கு சென்றனர்.ஆந்திர மாநிலம், ராமையாபட்டினம் கடல் பகுதியில் மீன்

சென்னை : கடலில் மாயமான காசிமேடு மீனவர்கள் 11 பேரை, இந்திய கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர்.

சென்னை, ராயபுரத்தைச் சேர்ந்தவர் ஜான்; மீனவர். இவருக்கு சொந்தமான விசைப்படகில், 7ம் தேதி, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, சோமேஷ், ஜெகன், நீலகண்டன், சூரிய நாராயணன், காமேஷ், ராஜு, சிவாஜி, உள்ளிட்ட 11 பேர் கடலுக்கு சென்றனர்.ஆந்திர மாநிலம், ராமையாபட்டினம் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, விசைப்படகில் பழுது ஏற்பட்டது.

நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள், ஒயர்லஸ் மூலம் மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மீன்வளத்துறை நடவடிக்கையால், இந்திய கடலோர காவல் படை ஹெலிகாப்டர் தேடுதல் வேட்டையில் இறங்கியது.ஆந்திரா, கிருஷ்ணாம்பட்டினம் கடல் பகுதியில் இருந்து, 200 கி.மீ., தொலைவில் இருந்த விசைப்படகை கண்டுபிடித்தனர்.அதில், 11 மீனவர்களும் பத்திரமாக இருந்தனர்.

இரண்டு விசைப்படகுகளில் சென்று, நேற்று அவர்களை மீட்டு, சென்னை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.படகு கடலில் மிதந்தபடி இருந்ததால், மீனவர்கள் உயிர் தப்பியுள்ளனர். அவர்கள் இன்று கரை திரும்புவர் என, மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X