சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
கோவில் உண்டியல் உடைப்புநொளம்பூர்: முகப்பேர் மேற்கு, காளமேகம் சாலை, 1வது பிளாக்கில், ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் அம்மன் சன்னிதி, சாய்பாபா சன்னிதி முன் இருந்த உண்டியல்கள், நேற்று முன்தினம் உடைக்கப்பட்டு, காணிக்கை பணம் திருடப்பட்டிருந்தது. கோவில் பொறுப்பாளர்கள் பரமசிவம், 55, நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.3 கிலோ கஞ்சா பறிமுதல்கிண்டி:

கோவில் உண்டியல் உடைப்பு

நொளம்பூர்: முகப்பேர் மேற்கு, காளமேகம் சாலை, 1வது பிளாக்கில், ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் அம்மன் சன்னிதி, சாய்பாபா சன்னிதி முன் இருந்த உண்டியல்கள், நேற்று முன்தினம் உடைக்கப்பட்டு, காணிக்கை பணம் திருடப்பட்டிருந்தது. கோவில் பொறுப்பாளர்கள் பரமசிவம், 55, நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

3 கிலோ கஞ்சா பறிமுதல்

கிண்டி: கிண்டி, வெங்கடாபுரத்தில் கஞ்சா விற்பனை நடப்பதாக, கிண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம், சம்பவ இடத்தை சோதனை செய்தபோது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பழனி, 47, என்பவர் சிக்கினார். அவரிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மொபைல்போன் பறித்தவருக்கு 'கம்பி'

தரமணி: தரமணி, எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் அஸ்வர்கான், 21. கடந்த, 18ம் தேதி, தரமணி ரயில் நிலையம் வழியாக சென்ற போது, இரண்டு பேர் இவரது மொபைல் போனை பறித்து தப்பினர். தரமணி போலீசாரின் விசாரணையில், மந்தைவெளியைச் சேர்ந்த சுப்ரமணி, 25, சதீஷ், 23 ஆகியோர் திருடியது தெரிந்தது. சுப்பிரமணியை நேற்று கைது செய்த போலீசார், சதீஷை தேடுகின்றனர்.

கடையில் திருட முயன்றோருக்கு வலை

பெரும்பாக்கம்: பெரும்பாக்கம், அரசன்கழனியில் யுவராஜ் 35, என்பவர், 'அய்யன்' என்ற பெயரில், 'பெட்ஸ்' கடை வைத்துள்ளார். நேற்று அதிகாலை மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து திருட முயன்றனர். இது கடையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவானது. பெரும்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

மளிகை கடையில் திருட்டு

கொரட்டூர்: மங்களாபுரம், பஜனை கோவில் தெருவில் மளிகை கடை வைத்துள்ளவர், பாஸ்கரன், 60. இவர், நேற்று காலை கடை திறக்க சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டு, 3,000 ரூபாய், மொபைல் போன் உள்ளிட்டவை திருடு போயிருந்தன. கொரட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

மூதாட்டியிடம் செயின் பறிப்பு

திருவொற்றியூர்: திருவொற்றியூர், ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் பார்வதி, 58. இவர், நேற்று தடம் எண்: 44 மாநகர பஸ்சில் பயணித்த போது, மூன்று பெண்கள் பார்வதியிடம் பேச்சு கொடுத்து, கவனத்தை திசை திருப்பி, அவரது 5 சவரன் செயினை திருடி சென்றனர். திருவொற்றியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

கோஷ்டி மோதலில் மூவர் கைது

காசிமேடு: தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் சுரேந்தர், 19, புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் செல்வத்துரை, 26, செல்வராஜ், 28 ஆகியோர், இரு கோஷ்டிகளாக பிரிந்து, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், நேற்று குடிபோதையில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் வழக்கு பதிந்து மூவரையும் கைது செய்தனர்.

தலைமறைவு திருடன் சிக்கினான்

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் பல்வேறு திருட்டில் ஈடுபட்ட நபர், முத்தியால்பேட்டை, பிரகாசம் சாலையில் பதுங்கியிருந்தபோது, தனிப்படை போலீசார் கைது செய்து, திருவொற்றியூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், சின்ன எர்ணாவூரைச் சேர்ந்த அப்பு, 21, என்பது தெரியவந்தது. நேற்று அவரை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.

வாலிபரை குத்தியோருக்கு காப்பு

அரும்பாக்கம்: அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ், 29; டீக்கடை உரிமையாளர். இவரது மனைவி கலையரசியிடம், நேற்று மதுபோதையில் நான்கு பேர் தகராறில் ஈடுபட்டனர். இதை பிரகாஷ் தட்டிக்கேட்டார். ஆத்திரமடைந்த ஆசாமிகள், பிரகாஷை குத்திவிட்டு தப்பினர். அரும்பாக்கம் போலீசார் குணசேகரன், 36, பாபு, 40 உள்ளிட்ட மூவரை கைது செய்து, தலைமறைவாக உள்ள பாலாஜியை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X