1,000 கிலோ மீன், 200 கிலோ இறால் ஏனாமில் மருமகனுக்கு மாமனார் சீர்| Dinamalar

இந்தியா

1,000 கிலோ மீன், 200 கிலோ இறால் ஏனாமில் மருமகனுக்கு மாமனார் 'சீர்'

Added : ஜூலை 21, 2021
Share
புதுச்சேரி:ஏனாமில், 1,000 கிலோ மீன், 200 கிலோ இறால், 1,000 கிலோ காய்கறிகள் சீர் கொடுத்து மருமகனை, மாமனார் ஆச்சரியப்படுத்தி உள்ளார்.புதுமண தம்பதிக்கு, ஆடி மாதம் சீர் கொடுத்து கொண்டாடுவது தமிழர்களின் வழக்கம். அதுபோல, தெலுங்கு பேசும் மக்கள், ஆண்டுதோறும் தெலுங்கு மாதமான, 'ஆஷாதம்' விழாவை கொண்டாடுகின்றனர். இது, பொனாலு என்ற பாரம்பரிய நாட்டுப்புற விழாவாக, ஜூன் - ஜூலை மாதங்களில்

புதுச்சேரி:ஏனாமில், 1,000 கிலோ மீன், 200 கிலோ இறால், 1,000 கிலோ காய்கறிகள் சீர் கொடுத்து மருமகனை, மாமனார் ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

புதுமண தம்பதிக்கு, ஆடி மாதம் சீர் கொடுத்து கொண்டாடுவது தமிழர்களின் வழக்கம். அதுபோல, தெலுங்கு பேசும் மக்கள், ஆண்டுதோறும் தெலுங்கு மாதமான, 'ஆஷாதம்' விழாவை கொண்டாடுகின்றனர். இது, பொனாலு என்ற பாரம்பரிய நாட்டுப்புற விழாவாக, ஜூன் - ஜூலை மாதங்களில் கொண்டாடப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள, புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்திலும் ஆஷாதம் விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை ஒட்டி, ஏனாமைச் சேர்ந்த பவன்குமார் என்பவருக்கு, ராஜமுந்திரியை சேர்ந்த அவரது மாமனார் பலராம கிருஷ்ணா, வித்தியாசமான சீர் கொடுத்து அசத்தி உள்ளார்.

இதன்படி, 1,000 கிலோ மீன், 200 கிலோ இறால், 10 ஆடுகள், 50 கிலோ கோழி, 1,000 கிலோ காய்கறிகள், 50 வகை இனிப்புகள், என வண்டி வண்டியாக சீர்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதை, அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.தன் மகள் பிரத்யுஷாவை மருமகன் சிறப்பாக கவனித்துக் கொள்வதால் மகிழ்ச்சி அடைந்து, இவ்வளவு சீர் செய்ததாக, பலராம கிருஷ்ணா கூறி உள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X