அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., 'கல்தா' புள்ளி தலைமைக்கு 'நோட்டீஸ்'

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
சேலம்:அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட இடைப்பாடி தொகுதி மீனவரணி செயலராக இருந்த சுரேஷ், விளக்கம் கேட்டு தலைமைக்கு, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளார்.சேலம் மாவட்டம், இடைப்பாடி தொகுதி, அ.தி.மு.க., மீனவரணி செயலராக இருந்தவர் சுரேஷ், 40. இவரை, 5ம் தேதி கட்சியில் இருந்து நீக்கி தலைமை உத்தரவிட்டது. இதற்கு விளக்கம் கேட்டு வக்கீல் தமிழேந்தி மூலம், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர்

சேலம்:அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட இடைப்பாடி தொகுதி மீனவரணி செயலராக இருந்த சுரேஷ், விளக்கம் கேட்டு தலைமைக்கு, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளார்.

சேலம் மாவட்டம், இடைப்பாடி தொகுதி, அ.தி.மு.க., மீனவரணி செயலராக இருந்தவர் சுரேஷ், 40. இவரை, 5ம் தேதி கட்சியில் இருந்து நீக்கி தலைமை உத்தரவிட்டது. இதற்கு விளக்கம் கேட்டு வக்கீல் தமிழேந்தி மூலம், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கு அவர் அனுப்பிய நோட்டீஸ்:நீக்க அறிவிப்பில் சுரேஷ் எந்த விதத்தில், கொள்கை, குறிக்கோள், கோட்பாடுக்கு முரணாக செயல்பட்டார். அவப்பெயர் உண்டாக்கும் விதமாக செயல்பட்டார் எனக் குறிப்பிடவில்லை.

அதனால் விளக்கம் அளிக்க வேண்டும்.அ.தி.மு.க., விதிகளின்படி பொதுச் செயலருக்கே தொண்டரை நீக்க அதிகாரம் உள்ளது. இந்த சட்ட அறிவிப்பு கிடைத்த 15 நாளில், நீக்க அறிவிப்பை திரும்ப பெறுவதாக பொது அறிவிப்பை வெளியிட வேண்டும். இல்லை எனில், தங்கள் மீது வழக்கு தொடரப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X