தெருநாய்கள் தொல்லை ;குடியிருப்பு மக்கள் அச்சம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளியில் தெருநாய்கள் தொல்லையால், மக்கள் அவதிப்படுகின்றனர்.பொள்ளாச்சி, ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சிக்கு உட்பட்ட செல்லமுத்து நகர், பாரதி வீதி உள்ளிட்ட பகுதிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.இங்குள்ள வீதிகளில், கூட்டமாக சுற்றும் தெருநாய்கள், வாகனங்கள் வரும் போது, ரோட்டின் குறுக்கே ஓடுவதால், ஓட்டுனர்கள்
 தெருநாய்கள் தொல்லை ;குடியிருப்பு மக்கள் அச்சம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளியில் தெருநாய்கள் தொல்லையால், மக்கள் அவதிப்படுகின்றனர்.பொள்ளாச்சி, ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சிக்கு உட்பட்ட செல்லமுத்து நகர், பாரதி வீதி உள்ளிட்ட பகுதிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.இங்குள்ள வீதிகளில், கூட்டமாக சுற்றும் தெருநாய்கள், வாகனங்கள் வரும் போது, ரோட்டின் குறுக்கே ஓடுவதால், ஓட்டுனர்கள் தடுமாறி கீழே விழுந்து விபத்திற்குள்ளாகின்றனர்.
மேலும், வாகனங்களில் செல்வோரை நாய்கள் துரத்துவதால் பயத்தில் விபத்துகள் ஏற்படுகின்றன.பொதுமக்கள் கூறியதாவது:செல்லமுத்து நகரில் நாய்கள் கூட்டமாக சுற்றுவதால், வீதிகளில் நடந்து செல்லவே அச்சமாக உள்ளது. குழந்தைகள், தெருக்களில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது. நாய்கள் தொல்லையால் நிம்மதியின்றி தவிக்கிறோம்.சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவற்றை பிடித்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மக்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X