கணவர் உடலை மீட்க கோரி 3 மாதமாக போராடும் மனைவி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவர் உடலை மீட்க கோரி 3 மாதமாக போராடும் மனைவி

Added : ஜூலை 21, 2021
Share
பெரம்பலுார்:வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊர் கொண்டு வர, இளம்பெண், ஒன்றரை வயது குழந்தையுடன் மூன்று மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறார். பெரம்பலுார் மாவட்டம், பென்னக்கோணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 35; மனைவி கவுசல்யா, 23. தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.ராஜ்குமார், 2019ல் சவுதி அரேபியாவுக்கு சென்று, கூலி வேலை செய்து வந்தார்.இந்நிலையில், கடந்த
 கணவர் உடலை மீட்க கோரி 3 மாதமாக போராடும் மனைவி

பெரம்பலுார்:வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊர் கொண்டு வர, இளம்பெண், ஒன்றரை வயது குழந்தையுடன் மூன்று மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறார்.

பெரம்பலுார் மாவட்டம், பென்னக்கோணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 35; மனைவி கவுசல்யா, 23. தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.ராஜ்குமார், 2019ல் சவுதி அரேபியாவுக்கு சென்று, கூலி வேலை செய்து வந்தார்.இந்நிலையில், கடந்த ஏப்., 20ல் அங்கு நடந்த விபத்தில் அவர் இறந்து விட்டதாக, மனைவிக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, கணவர் உடலை மீட்டு தரக்கோரி, கவுசல்யா, தன் ஒன்றரை வயது குழந்தையுடன், பெரம்பலுார் கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியாவிடம் இரண்டு முறை மனு அளித்தார். எவ்வித நடவடிக்கையும் இல்லை.பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர், சிதம்பரம் எம்.பி., திருமா வளவன் ஆகியோரையும் சந்தித்து மனு அளித்தார்.

யாரும் இதுவரை உதவவில்லை. இதனால், முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து, கணவர் உடலை மீட்டுத் தர வேண்டும் என, கவுசல்யா கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X