சம்பவம் செய்தி

தமிழ்நாடு

3000 கிலோ பாலிதீன் பறிமுதல்: ரூ.1 லட்சம் அபராதம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
தேனி : தேனியில் கோடவுனில் தடை செய்யப்பட்ட 3000 கிலோ பாலிதீன் பைகளை பறிமுதல் செய்த நகராட்சி அதிகாரிகள் தயாரித்து பதுக்கியவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர். தேனி அல்லிநகரம் நகராட்சி கமிஷனர் நாகராஜன் உத்தரவில், சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம் அறிவுரையில் சுகாதார ஆய்வாளர்கள் சுருளியப்பன், தர்மராஜ், மாரிமுத்து ஆகியோர், போலீசார் உதவியுடன் கம்போஸ்ட் ஓடைத்தெரு -

தேனி : தேனியில் கோடவுனில் தடை செய்யப்பட்ட 3000 கிலோ பாலிதீன் பைகளை பறிமுதல் செய்த நகராட்சி அதிகாரிகள் தயாரித்து பதுக்கியவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.

தேனி அல்லிநகரம் நகராட்சி கமிஷனர் நாகராஜன் உத்தரவில், சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம் அறிவுரையில் சுகாதார ஆய்வாளர்கள் சுருளியப்பன், தர்மராஜ், மாரிமுத்து ஆகியோர், போலீசார் உதவியுடன் கம்போஸ்ட் ஓடைத்தெரு - வள்ளிநகர் சந்திப்பில் உள்ள கோடவுனில் சோதனை செய்தனர். அங்கு அரசால் தடை செய்யப்பட்ட நீளம், பச்சை, கருப்பு வண்ண பாலிதீன் பைகள் தயாரிக்கப்பட்டு பண்டலாக விற்பனைக்கு குவிக்கப்பட்டது தெரியவந்தது. 3000 கிலோ பாலிதீன் பைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை பதுக்கியதாக மதுரை கண்ணதாசன் என்பவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X