சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரயில்வே கேட் அருகே இரும்பு துாண்களால் விபத்து அபாயம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
தேனி : தேனி அரண்மனைபுதுார் விலக்கு ரயில்வே கேட் அருகே இரும்பு துாண்கள் அமைப்பதால் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் உள்ளனர். மதுரை- போடி அகல ரயில்பாதை பணியில் தேனி வரை முடியும் தருவாயில் உள்ளது. அரண்மனைப்புதுார் விலக்கில் ரயில்வே கேட் அமைத்துள்ளனர். அங்கு மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலை குறுக்கிட்டு செல்கிறது. ரோடு 16 மீ. அகலமும் இருபுறமும் தலா 2 மீ. அகல மண் ரோடு உள்ளது.

தேனி : தேனி அரண்மனைபுதுார் விலக்கு ரயில்வே கேட் அருகே இரும்பு துாண்கள் அமைப்பதால் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் உள்ளனர்.

மதுரை- போடி அகல ரயில்பாதை பணியில் தேனி வரை முடியும் தருவாயில் உள்ளது. அரண்மனைப்புதுார் விலக்கில் ரயில்வே கேட் அமைத்துள்ளனர். அங்கு மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலை குறுக்கிட்டு செல்கிறது. ரோடு 16 மீ. அகலமும் இருபுறமும் தலா 2 மீ. அகல மண் ரோடு உள்ளது. இந்த மண் ரோட்டை ஒட்டி உயரமான இரும்பு கம்பங்களை ரயில்வே துறை இருபுறத்திலும் அமைக்கிறது. இரு மார்க்கத்திலும் வேகமாக வரும் வாகனங்கள் சிறிது கவனம் சிதறினாலும் கம்பங்களில் மோதி விபத்திற்குள்ளாகும் அபாயம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

ரூ.63 கோடியில் பாலம்தேனி- மதுரை ரோடு மேரிமாதா பள்ளி முதல் என்.ஆர்.டி. மருத்துவமனை வரை சேதுபாரத திட்டத்தில் ரூ.63 கோடியில் ஒரு கி.மீ. நீள மேம்பாலம் அமைக்க டெண்டர் முடிந்துள்ளது. விரைவில் பாலம் பணி துவங்கி முடிய இரு ஆண்டுகளாகும். மேம்பாலம் பயன்பாட்டிற்கு வரும் வரை ரயில்வே துறை இரும்பு கம்பங்களை அகற்றி வாகனங்கள் அச்சமின்றி சென்று வர உதவ வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X