கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சி.எஸ்.ஐ., தேர்தலில் அரசு ஊழியர்? கலெக்டர் கண்காணிக்க உத்தரவு!

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
மதுரை:அரசுத் துறை ஊழியர்கள் யாரும் சி.எஸ்.ஐ., தேர்தலில் போட்டியிடவில்லை; பதவி வகிக்கவில்லை என்பதை கன்னியாகுமரி கலெக்டர் விசாரித்து உறுதி செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.இடைக்கால தடைகன்னியாகுமரி மாவட்டம், இளம்பிவிளையைச் சேர்ந்த செல்வகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு:சி.எஸ்.ஐ., தேர்தலில், அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள கல்வி

மதுரை:அரசுத் துறை ஊழியர்கள் யாரும் சி.எஸ்.ஐ., தேர்தலில் போட்டியிடவில்லை; பதவி வகிக்கவில்லை என்பதை கன்னியாகுமரி கலெக்டர் விசாரித்து உறுதி செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.


இடைக்கால தடை

கன்னியாகுமரி மாவட்டம், இளம்பிவிளையைச் சேர்ந்த செல்வகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு:சி.எஸ்.ஐ., தேர்தலில், அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்கள் பங்கேற்க, உயர் நீதிமன்றம் 2020ல் இடைக்கால தடை விதித்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், விதிகளை மீறி சில அரசு ஊழியர்கள் சி.எஸ்.ஐ., தேர்தலில் பங்கேற்பது, பதவி வகிப்பது தொடர்கிறது. இதனால் அரசுத் துறைகளில் பணி பாதிக்கிறது. அவர்கள் நேர்மையாக அலுவலக பணியை நிறைவேற்ற வாய்ப்பில்லை. சி.எஸ்.ஐ., கன்னியாகுமரி திருமண்டல தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. சி.எஸ்.ஐ., கல்வி நிறுவனம் தவிர்த்து, பல்வேறு அரசுத் துறைகள், அரசுப் பள்ளிகள், கூட்டுறவுத்துறை, இதர அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஊழியர்கள் சி.எஸ்.ஐ., தேர்தலில் பங்கேற்க, பதவி வகிக்க தடை விதிக்க வேண்டும்.

தேர்தலில் போட்டியிடும், நிர்வாக பதவியில் தொடரும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை கோரி, கன்னியாகுமரி கலெக்டரிடம் மனு செய்தேன்; நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனு செய்தார்.

நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி, 'கன்னியாகுமரி கலெக்டர் விசாரிக்க வேண்டும். அரசு ஊழியர்கள் யாரும் விதிகளை மீறி சி.எஸ்.ஐ., தேர்தலில் போட்டியிடவில்லை.'பதவி வகிக்கவில்லை என்பதை உறுதி செய்து, கலெக்டர் 12 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பப்படுகிறது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X