பொது செய்தி

இந்தியா

40 கோடி பேருக்கு கொரோனா ஆபத்து: ஐ.சி.எம்.ஆர்., ஆய்வில் தகவல்

Updated : ஜூலை 22, 2021 | Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி : 'நாட்டின் மக்கள் தொகையில் 40 கோடி பேரை எளிதாக கொரோனா தொற்ற வாய்ப்புள்ளது' என மத்திய அரசு தெரிவித்துள்ளது.கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி மக்கள் உடலில் உருவாகி உள்ளதா என்பதை அறிய 'செரோ டெஸ்ட்' எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை கண்டறியும் பரிசோதனையை ஐ.சி.எம்.ஆர். எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் செய்து வருகிறது.இதுவரை பல்வேறு
 40 கோடி பேருக்கு கொரோனா ஆபத்து ஐ.சி.எம்.ஆர்., ஆய்வில் தகவல்

புதுடில்லி : 'நாட்டின் மக்கள் தொகையில் 40 கோடி பேரை எளிதாக கொரோனா தொற்ற வாய்ப்புள்ளது' என மத்திய அரசு தெரிவித்துள்ளது.கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி மக்கள் உடலில் உருவாகி உள்ளதா என்பதை அறிய 'செரோ டெஸ்ட்' எனப்படும் நோய் எதிர்ப்பு
சக்தியை கண்டறியும் பரிசோதனையை ஐ.சி.எம்.ஆர். எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் செய்து வருகிறது.

இதுவரை பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 28 ஆயிரத்து 975 பொது மக்களிடமும் 7252 சுகாதார பணியாளர்களிடமும் மூன்று கட்டங்களாக இந்த பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
ஜூன் - ஜூலையில் 21 மாநிலங்களைச் சேர்ந்த 70 மாவட்டங்களில் நான்காவது கட்ட 'செரோ டெஸ்ட்' மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை குறித்து ஐ.சி.எம்.ஆர். வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டின் மக்கள் தொகையில் 6 வயதுக்கு மேற்பட்ட மூன்றில் இரண்டு பங்கினர்
அல்லது 68 சதவீதம் பேருக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகி உள்ளது.மீதமுள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகவில்லை. எனவே 40 கோடி மக்கள் எளிதில் தொற்று பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளனர்.

இந்த ஆய்வில் பங்கேற்ற 85 சதவீத சுகாதாரப் பணியாளர்களின் உடலில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது. சுகாதாரப் பணியாளர்களில் 10ல் ஒருவர்
தடுப்பூசி போடாதவராக உள்ளார்.சமூக, ஆன்மிக, அரசியல் கூட்டங்கள், தேவையற்ற பயணங்கள் தவிர்க்கப்பட வேண்டும். இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே பயணங்கள் மேற்கொள்ளலாம்.

குழந்தைகள் உடலில் கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது.எனவே கல்வி பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டதும் பள்ளிகளை திறக்க முடிவு செய்யும்போது முதலில் ஆரம்ப பள்ளிகளை திறப்பதே சிறந்தது.மூன்றில் இரண்டு பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பதால் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றுவதில் அலட்சியம் காட்ட கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rupya -  ( Posted via: Dinamalar Android App )
21-ஜூலை-202118:57:36 IST Report Abuse
rupya உடலில் உள்ள எதிர்ப்பு அவ்வப்போது நிலையல்ல.அவ்வப்போது கூடும் குறையும். எதிர்ப்பு சக்தியை தொடர்ந்து ஒரே நிலையில் பராமரிக்க வேண்டுமென்றால் இருதயத்திற்கும் நுரையீரலுக்கும் அவ்வப்போது போதிய பயிற்சி தரவேண்டும். சுக்கு மிளகு இஞ்சி பூண்டு வெங்காயம் உணவில் இருந்து கொண்டே இருக்க வேண்டும்புகை பழக்கம் குடிப்பழக்கம் போதை பழக்கம் இருத்தல் கூடாது.
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
21-ஜூலை-202113:23:51 IST Report Abuse
Sridhar இவங்க சொல்றதெல்லாம் எப்படி நம்பருதுன்னே தெரியல.
Rate this:
Cancel
elango - vellore,இந்தியா
21-ஜூலை-202112:15:24 IST Report Abuse
elango First those who are working in ICMR, send their children to play in public places, cinemas and park beach etc,,,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X