சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜீப் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
உத்தமபாளையம் : கேரள ஏலத்தோட்டங்களுக்கு தொழிலாளர்கள் வேலைக்குச்செல்ல அனுமதிபெற்றுத்தரும்படி உத்தமபாளையத்தில் ஜீப் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.கொரோனா கட்டுப்பாடுகளால் கேரள ஏலத்தோட்டங்களுக்கு வழக்கம்போல் தொழிலாளர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதற்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் அல்லது 48 மணி நேரத்திற்குள் பரிசோதனை செய்து கொரோனா இல்லை

உத்தமபாளையம் : கேரள ஏலத்தோட்டங்களுக்கு தொழிலாளர்கள் வேலைக்குச்செல்ல அனுமதிபெற்றுத்தரும்படி உத்தமபாளையத்தில் ஜீப் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கொரோனா கட்டுப்பாடுகளால் கேரள ஏலத்தோட்டங்களுக்கு வழக்கம்போல் தொழிலாளர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதற்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் அல்லது 48 மணி நேரத்திற்குள் பரிசோதனை செய்து கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கொண்டுவரவேண்டும் என கேரள அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் அவர்களை அழைத்துச்செல்லும் ஜீப் டிரைவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே கேரளாவில் இருந்து எந்தவித கட்டுப்பாடுகளின்றி அங்குள்ளோர் கம்பம் வந்துசெல்வதாக புகார் எழுந்துள்ளது.

இந்த பாரபட்சத்தை கண்டித்தும், ஏலத்தோட்டங்களுக்கு தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல அனுமதி பெற்றுத்தரும்படி அதிகாரிகளை வலியுறுத்தியும் நேற்று காலை நூற்றுக்கணக்கான ஜீப் டிரைவர்கள் உத்தமபாளையம் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் தாசில்தார் உதயராணியிடம் மனு அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X