பொது செய்தி

தமிழ்நாடு

உணவு உற்பத்தி தொடர விவசாய பாதுகாப்பு நடவடிக்கை அவசியம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
தேனி : மாவட்டத்தில் உணவு உற்பத்தி தொடர விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் பாண்டியன், கலெக்டர் முரளிதரனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். உத்தமபாளையம், சின்னமனுார் கிழக்கில் மானாவாரியில் விவசாய செய்ய விவசாயிகள் முல்லைப்பெரியாறு ஆற்றோரம் கிணறு அமைத்து குழாய் மூலம் நீரை கொண்டு செல்கின்றனர். இந்நிலையில் ஆற்றில் நீர் சட்டவிரோதமாக

தேனி : மாவட்டத்தில் உணவு உற்பத்தி தொடர விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் பாண்டியன், கலெக்டர் முரளிதரனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உத்தமபாளையம், சின்னமனுார் கிழக்கில் மானாவாரியில் விவசாய செய்ய விவசாயிகள் முல்லைப்பெரியாறு ஆற்றோரம் கிணறு அமைத்து குழாய் மூலம் நீரை கொண்டு செல்கின்றனர். இந்நிலையில் ஆற்றில் நீர் சட்டவிரோதமாக எடுக்கப்படுவதாக மோட்டார் களை மின்வாரியம் பறிமுதல் செய்கிறது. அரசியல் அழுத்தம் காரணமாக இந் நடவடிக்கை தொடர்வதாக விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.இது குறித்து மாவட்ட விவசாய சங்க தலைவர் பாண்டியன் கூறியதாவது: முன்னர் ஆறு, கண்மாய் நீர் நிலைகள் அருகே திறவு கிணறு அமைத்து அதில் மாடு பூட்டி நீரை இறைத்தனர்.

அறிவியலால் ஆயில் மோட்டார், மின் மோட்டாராக மாறியது. இதன் மூலம் உணவு உற்பத்திக்கு மட்டும் நீரை பயன்படுத்தினர். முல்லை பெரியாறு அணை கட்டும் போது அதன் கொள்ளளவு ஒரு ஏக்கர் நஞ்சைக்கு 180 நாட்கள் தண்ணீர் வழங்கும் அடிப்படையில் நீர் தேக்கப்பட்டது. தற்போது நெல் வயது 120 நாட்களாக குறுகியது. இதில் 60 நாட்களுக்கான நீர் மிஞ்சுகிறது. இதை விவசாயிகள் எடுத்து உணவு உற்பத்தி செய்யலாம்.இப் பகுதி விளைநிலங்களில் ரோடு விரிவாக்கம், வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் என ஆயிரம் ஏக்கரில் விவசாயம் அல்லாத பயன்பாட்டிற்கு சென்று விட்டது.

இதற்கான நீரையும் தற்போது விவசாயிகள் உணவு உற்பத்திக்கு பெறலாம். எனவே ஆற்று நீரை உணவு உற்பத்திக்கு பயன்படுத்தும் விவசாயிகளையும் விவசாயத்தையும் பாதுகாக்க வேண்டும் ,என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X