பொது செய்தி

தமிழ்நாடு

ஆண்டிபட்டியில் பூங்கா அமைக்கப்படுமா

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
ஆண்டிப்பட்டி : ஆண்டிபட்டி ஒன்றியத்திற்கு சொந்தமான இடத்தில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை- தேனி மெயின் ரோடு சக்கம்பட்டியில், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமாக பல சென்ட் இடம் உள்ளது. இங்கிருந்த அலுவலர்களுக்கான குடியிருப்புகள் சேதமடைந்ததால் இடித்து அப்புறப்படுத்தபட்டது. தற்போது இப்பகுதியில் வணிக வளாகம், ஊராட்சி ஒன்றிய சேவை

ஆண்டிப்பட்டி : ஆண்டிபட்டி ஒன்றியத்திற்கு சொந்தமான இடத்தில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை- தேனி மெயின் ரோடு சக்கம்பட்டியில், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமாக பல சென்ட் இடம் உள்ளது. இங்கிருந்த அலுவலர்களுக்கான குடியிருப்புகள் சேதமடைந்ததால் இடித்து அப்புறப்படுத்தபட்டது. தற்போது இப்பகுதியில் வணிக வளாகம், ஊராட்சி ஒன்றிய சேவை மைய கட்டடம் உள்ளது. வணிக வளாகத்தின் முகப்பு பகுதியில் பல சென்ட் அளவிலான காலி இடத்தில் தனிநபர்கள் வாகனங்களை நிறுத்தியும், கடைகள் அமைத்தும் ஆக்கிரமித்துள்ளனர்.

ரூ. பல கோடி மதிப்பிலான இடம் கேட்பாரற்று உள்ளது. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இந்த இடத்தை சர்வே செய்து ஆக்கிரமிப்பு அகற்றி வேலி அமைத்து பாதுகாக்கவேண்டும். ஒன்றிய அலுவலக பயன்பாட்டிற்கான கட்டடங்கள், குடியிருப்புகள் , மக்களுக்கான பொழுதுபோக்கு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X