பொது செய்தி

தமிழ்நாடு

குறுகலான ரோட்டால் தலைவலி விரிவுபடுத்த மக்கள் கோரிக்கை

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அடுத்துள்ள சமத்துார் பேரூராட்சியில், குறுகலான நெடுஞ்சாலையால் விபத்து, நெரிசல் ஏற்படுகிறது.பொள்ளாச்சி - வால்பாறை நெடுஞ்சாலை, சமத்துார் ஊரின் நடுவே ஊடுருவிச் செல்கிறது. இங்குள்ள இரண்டு பஸ் ஸ்டாப்களுக்கு இடையே, 200 மீட்டர் தொலைவுக்கு ரோடு குறுகலாக உள்ளது. இப்பகுதியில் இரண்டு பக்கமும் வீடுகள், கடைகள் இருப்பதால், ரோடு விரிவாக்கத்தின் போதும்,
 குறுகலான ரோட்டால் தலைவலி விரிவுபடுத்த மக்கள் கோரிக்கை

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அடுத்துள்ள சமத்துார் பேரூராட்சியில், குறுகலான நெடுஞ்சாலையால் விபத்து, நெரிசல் ஏற்படுகிறது.பொள்ளாச்சி - வால்பாறை நெடுஞ்சாலை, சமத்துார் ஊரின் நடுவே ஊடுருவிச் செல்கிறது. இங்குள்ள இரண்டு பஸ் ஸ்டாப்களுக்கு இடையே, 200 மீட்டர் தொலைவுக்கு ரோடு குறுகலாக உள்ளது. இப்பகுதியில் இரண்டு பக்கமும் வீடுகள், கடைகள் இருப்பதால், ரோடு விரிவாக்கத்தின் போதும், குறிப்பிட்ட அளவுக்கு மேல் இப்பகுதி விரிவுபடுத்தப்படாமல், குறுகலாகவே விடப்பட்டுள்ளது.வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரிக்கும் சூழலில், இந்த குறுகிய ரோட்டில் தினமும் விபத்து, போக்குவரத்து ஸ்தம்பிப்பு என தீராத தலைவலியாக மாறியுள்ளதாக மக்கள் புலம்புகின்றனர்.பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், சமத்துாரில் குறுகிய ரோட்டை, ஆக்கிரமிப்புகள் இருந்தால் அகற்றியும், நிலம் எடுப்பு செய்தும், விரிவுபடுத்த நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X