சம்பவம் செய்தி

தமிழ்நாடு

14 வயது சிறுமி பலாத்காரம் 'போக்சோ'வில் 6 பேர் கைது

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆறு பேரை, 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த, 10ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. சிறுமியை பெற்றோர், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுமி ஐந்து மாதம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆறு பேரை, 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்

.கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த, 10ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. சிறுமியை பெற்றோர், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுமி ஐந்து மாதம் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர். அதிர்ச்சியடைந்த டாக்டர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார், சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.முதலில், சிறுமியை 17 வயது சிறுவன் பலாத்காரம் செய்துள்ளான். இதை தெரிந்து கொண்ட மகரஜோதி, 31, என்பவர் சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். இதுபோன்று, சிறுமியை மிரட்டி, 19, வயதுடைய மூவர், 16 வயது சிறுவன் ஆகியோரும் பலாத்காரம் செய்துள்ளனர். 'போக்சோ' சட்டத்தில் ஆறு பேரையும் போலீசார் கைது செய்தனர்.க்ஷ


தொழிலாளி கைது

கோவை மாவட்டம், காரமடை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் விக்ரம், 20; கட்டட தொழிலாளி. இவர் வீட்டின் அருகே வசித்த 10ம் வகுப்பு மாணவியிடம், காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மாணவியின் தாய் புகாரின்படி, காரமடை போலீசார், விக்ரமை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X