காட்டுபன்றிகள் தொல்லை: சேலை கட்டி விரட்டியடிப்பு| Dinamalar

காட்டுபன்றிகள் தொல்லை: சேலை கட்டி விரட்டியடிப்பு

Added : ஜூலை 21, 2021
Share
பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் காட்டுப்பன்றிகள் தொல்லையில் இருந்து, பயிர்களை பாதுகாக்க வேலியில் சேலை கட்டியுள்ளனர்.பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதி விவசாயிகள் தென்னை மற்றும் காய்கறி பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். இதில், மலையை ஒட்டிய பகுதிகளில், யானை மற்றும் காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகமுள்ளது. சமீப காலமாக, ஆனைமலை, பொள்ளாச்சி உள்ளிட்ட

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் காட்டுப்பன்றிகள் தொல்லையில் இருந்து, பயிர்களை பாதுகாக்க வேலியில் சேலை கட்டியுள்ளனர்.பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதி விவசாயிகள் தென்னை மற்றும் காய்கறி பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். இதில், மலையை ஒட்டிய பகுதிகளில், யானை மற்றும் காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகமுள்ளது. சமீப காலமாக, ஆனைமலை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில், காட்டுப்பன்றி தொல்லை அதிகரித்துள்ளது. அவற்றிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் போராடுகின்றனர்.இரவு நேரங்களில் விளைநிலங்களில் முகாமிடும் காட்டுப்பன்றிகள், சாகுபடி செய்த பயிர்களை துவம்சம் செய்து விடுவதால், விவசாயிகள் நஷ்டமடைகின்றனர்.இந்நிலையில், காட்டுப்பன்றி தொல்லையில் இருந்து பயிர்களை காப்பாற்ற, சாகுபடி பரப்புக்குள் அவை நுழையாமல் தடுக்க வரப்பு பகுதிகளில் வண்ண மயமான சேலைகளை கட்டி வருகின்றனர். மேலும், இளம் தென்னங்கன்றுகளை பாதுகாக்க, குழியை சுற்றிலும் சேலையை வேலியாக அமைத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X